முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி அப்பா பைத்தியம் சாமியின் 164வது பிறந்தநாள் குரு பூஜை..! சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி..!

புதுச்சேரி அப்பா பைத்தியம் சாமியின் 164வது பிறந்தநாள் குரு பூஜை..! சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி..!

X
புதுச்சேரி

புதுச்சேரி அப்பா பைத்தியம் சாமியின் 164வது பிறந்தநாள் குரு பூஜை

Sadhguru Appabaithiyam Sami : புதுச்சேரியில் உள்ள சத்குரு அப்பாபைத்தியம் சாமியின் 164வது பிறந்தநாள் குரு பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஆன்மீக குருவாக சொல்லப்படுபவர் அப்பா பைத்திய சாமிகள். எனவே, புதுச்சேரி கோரிமேடு பகுதியில் முதல்வர் ரங்கசாமியின் சொந்த செலவில் அப்பா பைத்திய சாமிக்கு கோவில் அமைத்து நாள்தோறும் பூஜை செய்து வருகிறார்.

இந்நிலையில், அப்பா பைத்திய சாமியின் 164வது பிறந்தநாள் குரு பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அப்பா பைத்திய சாமிக்கு சிறப்பு அடபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பந்தியில் உணவு சாப்பிட்ட முதல்வர் ரங்கசாமி

தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி மகா தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தார். இந்த குரு பூஜை விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அப்பா பைத்தியம் சாமியை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், அங்கே பக்தர்களுடன் அமர்ந்து முதல்வர் ரங்கசாமி அறுசுவை உணவு சாப்பிட்டார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry