முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி ஒலக்கூர் அகத்தீஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

புதுச்சேரி ஒலக்கூர் அகத்தீஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

X
அகத்தீஸ்வரர்

அகத்தீஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்

Puducherry News : புதுச்சேரி அடுத்த ஒலக்கூர் கிராமம் ஸ்ரீகாமாட்சி அம்மாள் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவை முன்னிட்டு 108 கலசாபிஷேகம் நடைபெற்றது. 

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ஒலக்கூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை கடந்த 3ம் தேதி நடைபெற்றது. அப்போது, அகத்தீஸ்வரர் மற்றும் பரிவார விமானங்கள் மகா கும்பாபிஷேகமும், மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து காமாட்சியம்மாள், அகத்தீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து கோவிலில் மூலவருக்கு 48 நாட்களும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. மண்டல அபிஷேக நிறைவு நாளில் கோவில் வளாகத்தில் யாக சாலை வேள்வியும், யாகசாலையில் 108 கலசங்கள் பூஜை செய்யப்பட்டது. பூஜிக்கப்பட்ட 108 கலசங்களும் கோவில் உட்பிரகாரம் வலம் வந்ததை தொடர்ந்து மூலவருக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம் பலம் வரும் காட்சியும், வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Puducherry