

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணம் பிப்ரவரி 11-இல் நடக்க இருக்கிறது.


4 நாட்கள் நடைபெறும் இந்த திருமண நிகழ்வில் முதல் நாளான நேற்று ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


சவுந்தர்யா திரைத்துறையில் பணியாற்றும் நிலையில், விசாகன் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.


திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால் தனுஷ் தாமதமாக வந்து நிகழ்வில் கலந்துகொண்டார்.


தனுஷ் தாமதமாக வந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் படப்பிடிப்பில் இருந்ததால் அவர் நிகழ்வு முழுக்க பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.


இன்று ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடக்கிறது. பிப்ரவரி 11 அன்று மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் ரஜினியின் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.