முகப்பு » புகைப்பட செய்தி » விருதுநகர் » விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

Virudhunagar District Waterfalls | விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத பல அருவிகள் இருக்கின்றன. வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அழகிய அருவிகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

 • 110

  விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

  மாவட்டம் வடக்கில் மற்றும் மாவட்டங்களையும், தெற்கில் மற்றும் மாவட்டங்களையும், கிழக்கில் மாவட்டத்தையும் மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையுடன் கேரள மாநிலத்தையும் வடமேற்கில் மாவட்டத்தையும் தனது எல்லைகளாக கொண்ட அழகான மாவட்டமாகும்.

  MORE
  GALLERIES

 • 210

  விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

  இதந்த மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்களும் புகழ்பெற்ற பல கோவில்களும் அமைந்துள்ளன. காமராஜர், ரமண மகரிஷி என புகழ்மிக்க பலரும் பிறந்த இந்த விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக அதிகம் அறியப்படாத பல அருவிகள் மற்றும் அழகான இடங்கள் இருக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 310

  விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

  இயற்கையை விரும்பும் சுற்றுலா பயணிகளும், தேடித் தேடிச்சென்று அருவியில் குளித்து மகிழ ஆர்வமாக இருப்பவர்களுக்கும் அட்டகாசமான பல இடங்கள் விருதுநர் மாவட்டத்தில் இருக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 410

  விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

  அந்த வகையில், ராஜபாளையத்திற்கு அருகில் அழகே வடிவாய் அமைந்த பல அருவிகள் உயர்ந்த மலை மீதிருந்து, துள்ளிக் குதித்துவரும் சுவையான தண்ணீரை தன்னகத்தே கொண்டதாக இருந்து வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 510

  விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

  அய்யனார் அருவி: விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது அற்புதமான இந்த அய்யனார் அருவி. இந்த அருவிக்கு அருகில் நீர்காத்த அய்யனார் கோவில் இருக்கிறது. இதனால், இந்த அருவிக்கு இந்த பெயர் வந்தது.

  MORE
  GALLERIES

 • 610

  விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

  இந்த அய்யனார் அருவி ராஜபாளைத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில், சில்லென்று கொட்டும் சுவை மிகுந்த தண்ணீருடன் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 710

  விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

  செண்பகத்தோப்பு அருவி :ராஜபாளையத்திற்கு அருகில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் இருக்கும் காட்டழகர் கோவிலுக்கு அருகில் இருக்கிறது செண்பகத்தோப்பு அருவி. மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் இந்த அருவி காணப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 810

  விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

  ராக்காச்சி அம்மன் அருவி : இந்த அருவியும் ராஜபாளையத்திற்கு அருகில்தான் அமைந்திருக்கிறது. இந்த அருவி பலரும் அறியாத ஒன்றாகும். ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு அருகில் வனப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த அருவிக்கு செல்ல வனத்துறையினரின் அனுமதியை பெறவேண்டும்.

  MORE
  GALLERIES

 • 910

  விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

  அருவிக்கு ஆற்று வழியாக நடந்து செல்ல வேண்டும் என்பதால், நீர் வரத்து அதிகம் உள்ள காலங்களையும், மழை நேரங்களையும் தவிர்ப்பது நல்லது. மேற்கு தொடர்ச்சி மலைமீது மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கவனமாக செல்லவேண்டும்.

  MORE
  GALLERIES

 • 1010

  விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அருமையான அருவிகள்!

  சாஸ்தா கோவில் அருவி : இதுவும் ராஜபாளையத்திற்கு அருகில்தான் அமைந்துள்ளது. வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு, வனத்துறையினருடன்தான் செல்ல வேண்டும். இந்த அருவியில் குளிப்பது அலாதியான இன்பத்தை கொடுக்கும்.

  MORE
  GALLERIES