விருதுநகரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று விடிய விடிய ஜொலித்த குடில்கள்..!
Virudhunagar Christmas Celebration : கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குகளும், தெருக்களில் ஒளிரும் வண்ண வண்ண விளக்குகளும், நட்சத்திர விளக்குகளும் தான் நினைவுக்கு வரும். அதையும் தாண்டி கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் வழக்கமும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்
கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினத்திலும் இயேசு பிறந்ததாக கூறப்படும் பெத்லகேம் நகரின் அந்த மாட்டு தொழுவ சூழலை நினைவு கூறும் வகையில் குடில் அமைப்பர்.
2/ 9
அதேபோன்று மனித பொம்மைகளையும், குழந்தை ஏசு சிலையும் வாங்கி வைத்து வணங்குவர்.
3/ 9
மேலும், மாட்டு தொழுவம் போன்றே வைக்கோல்களை பரப்பி அதில் உருவ பொம்மைகளை வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரிப்பர்.
4/ 9
இதன் அளவு அவரவர் வசதிக்கேற்ப மாறுபடும்.
5/ 9
இந்த குடில்கள் அமைக்கும் பழக்கம் இந்தியாவை காட்டிலும், மேலை நாடுகளில் அதிகமாக இன்றும் பின்பற்றப்படுகிறது.
6/ 9
அந்தவகையில் விருதுநகரில் கிறிஸ்துமஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
7/ 9
மக்கள் தங்கள் இல்லங்களிலும், தெருக்களிலும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து அலங்கரித்திருந்தனர்.
8/ 9
குறிப்பாக அல்லம்பட்டி வாட்டர் டேங்க், பாண்டியன் நகர், கட்டையபுரம் போன்ற இடங்களில் தெருக்களில் பிரம்மாண்டமான குடில்கள் அமைக்கப்பட்டது.
9/ 9
அந்த தெருவே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் ஜொலித்துக்கொண்டிருந்தது.