மாவட்டம் திருச்சுழியில் உள்ள திருமேனிநாதர் கோவில், விருதுநகரில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும், அருப்புக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவத்தலமாகும். புகழ்பெற்ற இந்த கோவில் தேவாரப் பாடல் பெற்ற 274 ஆலயங்களில் 202ஆவது ஆலயமாகவும், பாண்டிய நாட்டுத் தலங்களில் 12ஆவது தலமாகவும் திகழ்கிறது.
இந்த கோவிலின் மூலவர் திருமேனிநாதர். இவர் சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோல நாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர் மற்றும் பூமீஸ்வரர் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அம்பாள் துணைமாலையம்மை சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள் மற்றும் மாணிக்கமாலை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
சிவபெருமான் திருமணக் கோலத்தில் அருளும் இந்த கோவிலில் திருமணம் செய்து கொள்வதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இதேபோல எல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் நீங்கும் என்கிறனர். ஆனால் இந்த ஊரில் செய்த பாவம், இங்கே அன்றி வேறு எங்கும் தீராது என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.