இந்த பகுதியில், புலிகளின் நடமாட்டம் இருப்பதால், புலிகள் சரணாலயமாக அறிவிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கே யானை, தேவாங்கு, முள்ளம்பன்றி, வேங்கைப் புலி, சிறுத்தை, வரையாடு, கடமான், கேளையாடு, கருமந்தி, வெள்ளை மந்தி உள்ளிட்ட விலங்குகளும் காணப்படுகின்றன.