அதனைத் தொடர்ந்து, வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டு பகுதியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் தொல்லியல் துறையினர் கடந்த ஆண்டு (2022) மார்ச் 16ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டனர். அங்கே அகழாய்வுக்காகத் தோண்டப்பட்ட 16 குழிகளில் பல்வேறு அரிய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.