இஸ்ரோவில் கடந்த மாதம் ஆசாதி சாட் 2 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளுக்கு மென்பொருள் தயாரித்து இஸ்ரோ சென்று வந்த பள்ளி மாணவிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கௌரவித்தார் மாணிக்கம் தாகூர். இதனைத் தொடர்ந்து குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பொன்னாடை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார்.
மேலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மரக்கன்று வழங்கி பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தலைவர் என்பவர் அவர் நின்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அதை விட்டுவிட்டு தன்னைதானே எம்ஜிஆர், கலைஞர் ,ஜெயலலிதா என கூறிக்கொண்டு காமெடி பீஸ் போல இருக்க கூடாது. மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றவர் அரவக்குறிச்சி பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர். எங்களைப் பொறுத்தவரை அவர் ரிஜெக்டட் பீஸ் என கூறினார்.
பொய் பிரட்டல் பேசுவதை முதலில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணாமலை பாதையாத்திரை செல்ல உள்ளதாகவும் ஊழல் பட்டியல் வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இவராகவே ரூம் போட்டு யோசித்து எழுதி வருவம் செயலிற்கெல்லாம் நாம் பொறுப்பாக முடியாது. முதலில் அண்ணாமலை மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக வென்று காட்டட்டும் அதன்பின் அவரது பேச்சிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். என்றார்.
கப்பலூர் சுங்கச்சாவடி குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நாடாளுமன்ற உறுப்பினராக நானும் கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தோம். அதற்கு அவர் மார்ச் மாதம் வரை எனக்கு கால அவகாசம் கொடுங்கள் அதற்கு உரிய முடிவு எடுப்பேன் எனக் கூறியுள்ளார் மார்ச் முடிந்தவுடன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஏப்ரல் முதல் வாரித்திலேயே மீண்டும் அவரை சந்தித்து வலியுறுத்துவோம். இது முழுக்க முழுக்க மத்திய அரசுத் துறையிடம் சார்ந்துள்ளது. மக்கள் மீது அராஜக செயலை தூண்டும் இந்த கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் மீது ஒரே நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என பேசியுள்ளார்.