ராஜா கோட்டை என்று அழைக்கப்படும் ராஜகிரியானது சுமார் 800 அடி உயரமுள்ள மலையாகும். செங்குத்தான அமைப்புடைய இதன் உச்சிக்குச் செல்ல 1,012 படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டும். இதன் உச்சியை நெருங்கும் இடத்தில் இயற்கையாகவே ஒரு மலைப்பிளவு இருக்கிறது. இதன்மீது இப்போது மரப்பாலம் அமைத்திருக்கிறார்கள். முன்னர், போர்க்காலங்களில் இங்கிருந்த தற்காலிகப் பாலத்தை அகற்றிவிட்டால், எதிரிகளால் நெருங்க முடியாது. மேலே, மண்டபம், தானியக் களஞ்சியம் உள்ளிட்டவை இருக்கின்றன.
இந்த செஞ்சிக்கோட்டை தர்பார் மண்டபம், படைவீடுகள், யானை மண்டபம், உடற்பயிற்சிக்கூடம், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு, குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், அந்தப்புரம், கோவில்கள், தானியக்களஞ்சியங்கள், தோரண வாயில்கள், காவல் அரண்கள், பாதாள சிறை, மதில்சுவர் மற்றும் அகழி என ஒரு கோட்டைக்கான சகல அம்சங்களோடும் இருக்கும் சிறப்பு வாய்ந்த கோட்டையாகத் திகழ்கிறது.
இந்த கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கிருக்கும் அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். பலர் ராஜா கோட்டையையும் மேலும் சில இடங்களையும் மட்டுமே சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி விடுகின்றனர். வரலாற்று பொக்கிஷமாகத் திகழும் இந்த செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கூற்றுலா தலமாக இருந்து திகழ்கிறது.