அங்கே, பாறைகளின் நடுவே இரண்டு இடங்களில் சுமார் 20 முதல் 30 அடி உயரத்தில் இருந்து தண்ணீரானது அருவியாக பாய்ந்து வெண்மையாக, மின்னும் வெள்ளியைப் போன்று காட்சியளிக்கும். இந்த அழகிய காட்சியானது அடடா! என்ன அழகு என்று உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். அருகே சென்று, அருவியில் குளித்து மகிழலாம்.