தமிழகத்தில் ஏரளாமான சிவன் தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் சிவன் குறித்து நாம் காணவேண்டியுள்ளது. மேலும் இவரை ஆதி சைவர் என்றும் கூறுவது உண்டு தென்னாட்டில் சிவனை சீவன் என்றும் அழைப்பது உண்டு இதில், நாயன்மார்களில் அப்பர், சுந்தர், திருஞான சம்பந்தர் ஆகியாரால் ஆலங்களை பாடியுள்ளனர். தேவார பாடல்களில் கடைசியாக பாடப்பெற்ற தலம் எங்கு உள்ளது என்பது குறித்து காணலாம்.
விழுப்புரம் மாவட்டம், சேமங்கலம் அடுத்த கிளியனூரில் அமைந்துள்ளது இந்த தேவார பாடல் பெற்ற கடைசி அகஸ்தீஸ்வரர் திருக்கோவில். விழுப்புரத்தில் இருந்து கொடத்தூர் வழியாக சுமார் 48 கிலோ மீட்டர் பயணித்தால் இக்கோவிலை அடையலாம். அல்லது, அரியூர் வழியாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் 52 கிலோ மீட்டர் கடந்தும் இத்தலத்திற்கு செல்லலாம். திண்டிவனத்தில் இருந்து இக்கோவில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
கிளியனூர் அகஸ்தீஸ்வரர் கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இக்கோவிலில் தென்புற கருவறை சுவரில் உள்ள கல்வெட்டில் சோழ மன்னனின் பெயர் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மதுரை பரகேசரி வர்மன் முதல் பராந்தகன் காலத்தில் இக்கோவில் கருங்கல் கோவிலாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நீண்ட வருடம் தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியமின்மை உள்ளவர்கள் இக்கோவிலில் திங்கட்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் வேண்டியது கிடைக்கும். மேலும், தொடர் வயிற்று வழியால் அவதியுற்று வருவோர் சன்னதியில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ய வயிற்று வழி பூரண குணமாகும் என்பது நம்பிக்கை. மேலும், தொடர் வயிற்று வழியால் அவதியுற்று வருவோர் சன்னதியில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ய வயிற்று வழி பூரண குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.