முகப்பு » புகைப்பட செய்தி » விழுப்புரம் » கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

Viluppuram District | விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரையில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். இந்த கோவிலின் சிறப்புகளை இங்கே காணலாம்.

  • 18

    கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

    மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரையில் பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில், தொண்டை நாட்டில் இருக்கும் 32 சிவத்தலங்களுள் இது 30ஆவது திருத்தலமாக போற்றப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 28

    கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

    இங்குள்ள சிவலிங்கம் கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளில் முகமுடைய மும்முக லிங்கமாகும். இறைவன் சந்திரசேகரன். அன்னை வடிவாம்பிகை. இந்த கோவிலில் பெருமாள் சந்நிதியும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 38

    கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

    குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவரை அழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது.

    MORE
    GALLERIES

  • 48

    கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

    இந்த திருவக்கரை சிவன் கோவில் திஞனசம்பந்தர், திருநாவுக்கரசர், கபிலதேவ நாயனார், பெரிய புராணம் அருளிய சேக்கிழார் உள்ளிட்டோர் வழிபட்ட தலமாகும். வக்கிரன் வழிபட்ட தலம் என்று தல புராணம் கூறுகிறது. திஞனசம்பந்தர் பாடல் பெற்ற தலமாவும் திகழ்கிறது.

    MORE
    GALLERIES

  • 58

    கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

    கோவிலின் ராஜகோபுரத்திற்கு இடப்பக்கம் “வக்கிரகாளி” அம்மன் அழகு மிக்க தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அம்பாளுக்கு விசேஷமாக நாளாக கருதப்பட்டு பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 68

    கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

    “வராகநதி” என்றழைக்கப்படும் ‘சங்கராபரணி ’ ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள இந்த கோயில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் உள்ள பழமைவாய்ந்த கோவில்க இது போற்றப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 78

    கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

    அர்த்த மண்டபத்தில் நடராஜர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை அழகுற காட்சியளிக்கிறது. இதனை ‘வக்கிர தாண்வம்’ என்று பக்தர்கள் போற்றி வழிபடுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 88

    கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

    கிரக தோஷங்கள் நீங்க வழிபடவேண்டிய தலமாக கருதப்படுகிறது. திருமண வயதை கடந்தும், திருமண ஆகாமல் இருப்பவர்கள் இத்தலத்தில் தாலி, புடவை, மாலை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டி இத்தலத்தில் உள்ள மரத்தில் தொட்டில் வழிபடுகின்றனர்.

    MORE
    GALLERIES