இங்கே சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த கல்மரங்களுள் சில 30 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் குறுக்களவும் கொண்டவையாக இருக்கின்றன. உலகின் சில பகுதிகளில் மட்டுமே இதுபோன்ற அரியவகை கல்மரங்கள் கிடைத்துள்ளனர். இந்த கல்மரங்களை பார்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், ஆய்வாளர்களும் இங்கே வந்து பார்த்து வியந்து செல்கின்றனர்.