பாட்டுக்கச்சேரியில் தொண்டர்களின் விருப்பத்துக்காக குத்தாட்டம் போட்ட திமுக எம்.எல்.ஏ (படங்கள்)
Vellore Anaikattu MLA Nandakumar : "பொதுவாக என் மனசு தங்கம்.. ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்” என்ற ரஜினியின் பாடலுக்கு தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டம் போட்ட வேலூர் அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ நந்தகுமார்.. (படங்கள்: செல்வம், வேலூர்)
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
2/ 9
இதில் கைத்தறி மற்றும் நூல் துறை அமைச்சர் காந்தி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
3/ 9
இதில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 200 திமுக கழக முன்னோடிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கினார்.
4/ 9
மேலும் நலத்திட்ட உதவிகள் ஆட்டோக்கள், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, தையல் இயந்திரங்கள், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனங்கள் என பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார்
5/ 9
பின்னர் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ” திமுக விழாக்களில் பொதுமக்கள் அதிகமான மனுக்களை கொடுக்கின்றனர். மனுக்களை கொடுத்தால் தங்கள் பிரச்சனைகள் தீரும் தமக்கு நல்ல காலம் பிறக்கும் என நம்புகின்றனர். அதனால் மனுக்களை அதிகமாக கொடுக்கின்றனர்.
6/ 9
அத்தகைய சிறந்த ஆட்சியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக தலைவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நான் அறிஞர் அண்ணா தந்தை பெரியார் ஆகியாரே நேரில் கண்டதில்லை. ஆனால் கழக முன்னோடிகளை நான் தந்தை பெரியார் ஆகவும் அறிஞர் அண்ணாவாகவும் முத்தமிழ் அறிஞர் கலைஞராகவும் பார்க்கிறேன்” என்றார்.
7/ 9
விழாவிற்கு முன்னதாக நடைபெற்ற பாட்டு கச்சேரியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் குத்தாட்டம் போட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்..
8/ 9
“பொதுவாக என் மனசு தங்கம்.. ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்” என்ற ரஜினியின் பாடலுக்கு தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டம் போட்ட அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ நந்தகுமார்..
9/ 9
“பொதுவாக என் மனசு தங்கம்.. ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்” என்ற ரஜினியின் பாடலுக்கு தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டம் போட்ட அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ நந்தகுமார்..