பழைமை சிறப்பும் புகழும் கொண்ட இந்த கோவில், மும்மூர்த்திகளும் அருள் புரிவதால், இது மும்மூர்த்தி க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கடம்ப வனமாக இந்த பகுதி இருந்தாகவும், எனவே கடம்பனூர் என்று முற்காலத்தில் வழங்கப்பட்டது என்றும், இதுவே திரிந்து பிற்காலத்தில் கரம்பனூர் என்று அழைக்கடுவதாகவும் சொல்கின்றனர்.
குருமார்களில் ஏழு பேரும் வழிபட்ட சிறப்பான தலமாகவும் ஆதி குருஸ்தலம் என்றும் இது போற்றப்படுகிறது. அதன்படி பிரம்ம குரு, விஷ்ணு குரு, சிவ குரு, சக்தி குரு, சுப்ரமணிய குரு, தேவ குரு என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி, அசுர குரு ஆகிய ஏழு குருமார்களும் ஒருசேர தரிசனம் தந்து, பக்தர்களுக்கு அருள்புரியும் சிறப்பான குரு பரிகார தலமாக இது போற்றப்படுகிறது.