கடந்த, 3ஆம் தேதி இரவு முதல், இன்று காலை வரை, நடந்த நான்கு கால யாகச்சாலை பூஜைகளை, மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோயில் ஸ்தானீகர் ராஜா பட்டர் தலைமையில், சமயபுரம் கோயில் அர்ச்சகர்கள் மஹாதேவ சிவாச்சாரியார், கணேச சிவாச்சாரியார், சுவாமிநாத சிவாச்சாரியார் உள்ளிட்டோர் தேவார, திருவாசக முற்றோதல் உள்பட தமிழ் முறையில் செய்தோடு, ஆகம முறையில் தமிழில் குடமுழுக்கும் செய்து வைத்தனர்.