பச்சை மலையில் எருமைப்பள்ளி அருவி, மயிலூற்றுஅருவி, கோரையாறு அருவி என பல்வேறு அருவிகள் இருக்கின்றன. இவற்றுள் எருமைப்பள்ளி, கோரையாறு ஆகிய அருவிகளுக்குச் செல்ல வனத்துறையினரின் அனுமதி அவசியம். இங்கே, பேலூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி இருக்கிறது. இதில் நாம் ட்ரெக்கிங்கும் போகலாம். இதற்கும் வனத்துறையினரிடம் முன்னதாகவே அனுமதி பெறவேண்டும்.