இந்த கோவிலில் முக்கிய திருவிழாவாக, ஆண்டு பிரம்மோற்சவம் புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர் - அக்டோபர்) பதினொரு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அப்போது நடைபெறும் தேர் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இதேபோல், தெப்போற்சவ திருவிழா சித்திரை மாதங்களில் கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் பல்வேறு விழாக்கள் இங்கே நடைபெறும்.