நாம் வாழ்வதே பெறும் பாடாக இருக்கிறது. இந்நிலையில் நாம் ஏன் பிறந்தோம். ஏன் வாழ்கிறோம் என்று சிலருக்கு தோன்றும், மேலும், பிறந்ததே சாபக்கேடாக கூட நாம் எண்ணியிருப்போம். வாழ்கையில் நடந்ததையும், நடக்கப்போவதையும், நடப்பதையும் எண்ணி நாம் நொந்து கொண்டு இருந்தோம். இந்நிலையில், இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க உங்க வாழ்வே மாறும். நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இது என்ன கோவில் தான நினைக்கிறீங்க.
பிரம்மபுரீஸ்வரர் கோவில்
திருச்சி அருகே திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவில். இந்தியாவிலேயே மிக சொற்ப இடங்களில் இருக்கும் பிரம்ம தேவனுக்கான கோவில்களில் இது சிறப்பானதாகும்.
எப்படி செல்லலாம்?
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கி.மீ. தொலைவில் சிறுகனூருக்கு மிக அருகில் அமைந்துள்ளது திருப்பட்டூர் கிராமம். இங்குள்ள பிரம்ம கோவிலுக்கு அப்படி ஒரு ஆற்றல்.
சிவனுக்கு சமமாக அமைந்த பிரம்மன்
சிவனிடமிருந்து உலகை படைக்கும் ஆற்றலை பிரம்மன் பெற்றதாகவும், அதற்குள் அகந்தை தலைக்கேறிய பிரம்மன், சிவனையும் தன்னையும் சமமாக நினைத்து அவமதித்ததாகவும் நம்பிக்கை கதை உண்டு. வழிபடும் நேரம்
இந்த கோவிலில் காலை 7.30 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
மாற்றம் நிகழும்
உங்கள் தலையெழுத்தை எழுதியவர் பிரம்மதேவர். அப்படியானால் அவர்தானே அதை மாற்ற வேண்டும் என்கின்றனர் உள்ளூர் பக்தர்கள். வெறும் வாய்வாக்காக அல்லாமல், இங்கு சென்றுவந்தவருக்கு நிச்சயம் மாற்றம் நிகழும் என்கிறார்கள் அவர்கள்.
இந்த கோவிலுக்கு போக விதி வேண்டும்
இந்த கோவிலுக்கு செல்லவேண்டும் என்று விதி இருந்தால் மட்டுமே உங்களால் செல்லமுடியுமாம். அந்த விதி உங்களுக்கு இந்த தகவலைக் கொண்டு சேர்க்கும் என்கிறார்கள் தீவிர பக்தர்கள்.
பேராசையோடு தரிசிக்க முடியாதாம்
பங்குனி மாதம் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். அந்த நேரத்தில் லிங்கத்தை தரிசிப்பது மிகவும் சிறந்தது. இதனால் அவரது வாழ்க்கை மாறிப்போகும். அதே நேரத்தில் இதை அவ்வளவாக யாரும் தரிசித்தது கிடையாதாம். பேராசை கொண்டு தரிசிப்பவர்களுக்கு இருப்பதும் கெட்டுவிடும் என்று சொல்லி நம்மை அதிர்ச்சியடைய செய்கின்றனர் பக்தர்கள்.