பொன்மலை ரயில்வே பணிமனை 100 வருட வரலாற்று சிறப்பு பெற்றது. இந்த பணிமனை இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.
இந்த ரயில்வே பனிமலையில் ரயில்வே என்ஜின்கள், கேரேஜ் பெட்டிகள், வேகன் பெட்டிகள் போன்றவைகள் தயாரிக்கப்படுகிறது. அவை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இதேபோல் ரயில் என்ஜின்கள் போன்றவை பழுது பார்க்கும் இடமாகவும் இது இருந்து வருகிறது.
இந்நிலையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த ஊட்டி மலைப்பாதை நீராவி ரயில் என்ஜின் மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீலகிரி மலைப்பாதை பயணத்திற்காக அனுப்பப்பட்டுள்ள இந்த நீராவி என்ஜினானது, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. முழுக்க முழுக்க இந்தியாவின் சொந்த முயற்சியால் இது உருவாக்கப்பட்டுள்ளது.