முகப்பு » புகைப்பட செய்தி » திருச்சி » மலைப்பயணம்... அருவிகளில் குளியல்.. இது திருச்சியில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கம்...!

மலைப்பயணம்... அருவிகளில் குளியல்.. இது திருச்சியில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கம்...!

Trichy District | திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே பச்சை பசேலென்று கம்பீரமாக அமைந்திருக்கிறது பச்சைமலை. இந்த மலையின் குளுமையும், அடந்த காடுகளும், உயர்ந்த மரங்களும், கொட்டும் அருவிகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.

  • 18

    மலைப்பயணம்... அருவிகளில் குளியல்.. இது திருச்சியில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கம்...!

    மாவட்டதில் உயர்ந்து பரந்து அழகே வடிவாய் அமைந்திருக்கிறது பச்சை மலை. இந்த மலையானது சுமார் 520 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    மலைப்பயணம்... அருவிகளில் குளியல்.. இது திருச்சியில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கம்...!

    "பச்சமலைப் பூவு, இது உச்சிமலைத் தேனு...", "பச்சமல சாமி ஒன்னு உச்சிமலை ஏறுதின்னு" என்பன போன்ற பல திரைப்பட பாடல்கள் இந்த பச்சை மலையை உவமையாக வைத்து எழுதப்பட்டுள்ளன. இவை எல்லாம் இந்த மலையின் சிறப்பை போற்றும் வகையில் அமைந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 38

    மலைப்பயணம்... அருவிகளில் குளியல்.. இது திருச்சியில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கம்...!

    இந்த மலை, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,072 மீட்டர் உயரம் கொண்டதாக, பசுமை நிறைந்து காணப்படுகின்றது. இங்கே 150 க்கும் மேற்பட்ட பறவை இனங்களையும், பலவகை பட்டாம்பூச்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 48

    மலைப்பயணம்... அருவிகளில் குளியல்.. இது திருச்சியில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கம்...!

    அதிக குளிரோ அல்லது அதிக வெப்பமோ இல்லாமல் இதமான தட்பவெப்பநிலை கொண்ட இந்த மலைக்கு ஒருநாள் சுற்றுலா வருவதை பலரும் விரும்புகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 58

    மலைப்பயணம்... அருவிகளில் குளியல்.. இது திருச்சியில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கம்...!

    இந்த பச்சை மலை திருச்சியில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில், சுமார் 3 மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை பயணம் வித்தியாசமான, எப்போதும் நினைவில் தங்கும் அனுபவத்தைக் கொடுக்கும்.

    MORE
    GALLERIES

  • 68

    மலைப்பயணம்... அருவிகளில் குளியல்.. இது திருச்சியில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கம்...!

    திருச்சியியில் இருந்து துறையூர், அங்கிருந்து ஆத்தூர் சாலையில் சென்று உப்பிலியபுரத்தில் இருந்து பிரிந்து அங்கிருந்து சோபனபுரம் வழியாகச் சென்றால் பச்சைமலையை எளிதாக அடையலாம். வழியில், வயல்வெளிகள் பசுமை நிறைந்த காட்சிகள், ஓங்கி உயர்ந்த மரங்கள் போன்றவையும் கண்ணுக்கு விருந்து படைக்கும்.

    MORE
    GALLERIES

  • 78

    மலைப்பயணம்... அருவிகளில் குளியல்.. இது திருச்சியில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கம்...!

    பச்சைமலையில் மங்களம் அருவி, மயிலூற்று அருவி, எருமைப்பள்ளி அருவி, கோரையாறு அருவி என்று பல்வேறு அருவிகள் இருக்கின்றன. இதில் எருமைப்பள்ளி, கோரையாறு அருவிகளுக்கு வனத்துறையினரின் அனுமதியும், பாதுகாப்பும் அவசியமானவை. இதேபோல பல வியூவ் பாயின்ட்களும் இருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 88

    மலைப்பயணம்... அருவிகளில் குளியல்.. இது திருச்சியில் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சொர்க்கம்...!

    திருச்சி மாவட்டத்தில், பசுமை நிறைந்த மலைப்பகுதியில் பயணித்து, அருவிகளில் குளித்து மகிழ ஒருநாள் ட்டிரிப்புக்கு திட்டமிடுபவர்கள் இந்த பச்சை மலைக்கு வந்து என்ஜாய் பண்ணலாம்.

    MORE
    GALLERIES