ஹோம் » போடோகல்லெரி » திருச்சி » சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

Thirukailayamudayar Temple | திருச்சிக்கு அருகில் இருக்கும் சோழமாதேவி திருக்கயிலாய முடையார் கோவில் பல்வேறு வரலாற்று சிறப்புகளைக் கொண்டது. இங்கே சோழர்கால இசைக் கலைஞர்ககளின் பெயர்களை கொண்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

 • 110

  சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

  க்கு அருகில் இருக்கும் சோழமாதேவி திருக்கயிலாயமுடையார் கோவில் இருக்கும் சிவன் ஸ்ரீகயிலாயமுடையார், ஸ்ரீகைலாச பரமேசுவரர் என்றழைக்கப்படுகின்றார். கருவறையில் இறைவன் கயிலாய முடையார், லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் அருள்புரியும் அன்னை கற்பகாம்பாள் என்று அழைக்கப்படுகிறார். அம்பிகை அர்த்த மண்டபத்தில் நான்கு கரங்கள் கொண்டு, நின்ற நிலையில் அருள்புரிகிறார். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கியும், கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சியளிக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 210

  சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

  ராஜ ராஜ சோழனின் மனைவியரில் ஒருவர் சோழமாதேவி. இவர் பெயரால் உருவான ஊரே சோழமாதேவி. இந்த ஊர் ‘காவிரியின் தென்கரை பாண்டி குலாசனி வளநாட்டுப் பிரமதேயம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலம்’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இது திருச்சி-தஞ்சாவூர் சாலையில் திருவெறும்பூரிலிருந்து தெற்கே சூரியூர் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 310

  சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

  இந்த கோவில் வரலாற்று புகழ்மிக்கதாக திகழ்கிறது.
  உய்யகொண்டான் ஆற்று நீரை பாசனத்திற்கு பயன்படுத்த உய்யகொண்டான் ஏரி வாரியத்தை ராஜ ராஜ சோழன் அமைத்தான். அந்த ஏரி வாரியம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற ஓர் ஊரின் சபையோரால் நிர்வகிக்கப் பெற்றது என்ற தகவலை கூறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த கோவிலில் கி.பி 993ஆம் ஆண்டு முதலாம் ராஜ ராஜ சோழனார் கட்டப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், வீர ராஜேந்திரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

  MORE
  GALLERIES

 • 410

  சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

  இந்த கோவிலில்குள்ள வீரராஜேந்திரனின் கல்வெட்டு ஆதிசங்கரின் 'பகவத் பாதீயம்' எனும் சாரீர பாஷ்யத்திற்கு உரை எழுதிய சதானந்த பிடாரர் என்பவர் இயற்றிய உரையை தினமும் இங்கு சொற்பொழிவு ஆற்றியுள்ளார் என்றும் அவரின் பணிக்காக நிலம் கொடைகள் வழங்கப்பட்டதையும் இங்கிருக்கும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 510

  சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

  கோவில்களில் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், ‘உவச்சர்கள்’ எனப்பட்டனர். இங்குள்ள சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உவச்சர்கள் ‘பஞ்ச மகா சப்தம்’ செய்ய நிலம் அளிக்கப்பட்டதாக ராஜராஜனது 26ஆவது ஆட்சி ஆண்டு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 5 வகையான இசையைக் பஞ்ச மகா சப்தம் என்று கூறுவர். அதாவது தோல், துளை, நரம்பு, கஞ்சம், வாய்ப்பாட்டு போன்றவற்றால் எழும் நாதம் 'பஞ்ச மகா சப்தம்’ என்பர். ஆதிச்சன் பாழி, சோழமாதேவி பேருவச்சன், பல்லவராயன், திருவரங்கதேவன், கடம்பனான கந்தர்வ பேருவச்சன் என்பார் இசை வாசிக்கும் உவச்சர்களில் முக்கியமானவர்கள் என்று இங்கிருக்கும் கல்வெட்டு கூறுகிறது.

  MORE
  GALLERIES

 • 610

  சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

  கரடிகை, மத்தளம், சங்கு, எக்காளம் போன்ற 9 இசைக் கருவிகள் நாள்தோறும் இங்கு வாசிக்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. இங்கு ராஜ ராஜ சோழன் பெயரால் ஒரு மேடை இருந்ததாகவும் அங்கு கூடியே ஊர் குறித்த முடிவுகளும், கோயில் நிர்வாகம் குறித்த முடிவுகளும் எடுத்தனர் என்றும் இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 710

  சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

  வீரசோழ இளங்கோ வரையர் தேவி பராந்தகன் ஆதித்தபிடாரி என்பவன் சோழமாதேவி சிவாலயத்திற்கு பொற்கொடை அளித்தார் என்றும், இங்குள்ள ஆலயத்தில் நாட்டிய நிகழ்வுகள் நடைபெற்றன என்றும் எறன் கூத்தன் என்பவன் ஆலயத்தில் ஒரு நந்தவனம் அமைத்தான் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

  MORE
  GALLERIES

 • 810

  சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

  ராஜ ராஜ சோழன் தண்ணீர் பந்தல் அமைக்க நிலம் அளித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சிற்ப அழகுகள், கலைகள், விழாக்கள், விருதுகள், கொடைகள், நிர்வாகம், நீர் மேலாண்மை என பல வரலாற்றுத் தகவல்களை தன்னுள் தாங்கிக் கொண்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கிறது இந்த சோழமாதேவி கோவில்.கோவிலின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என இந்த கோவில் அழகுடன் பிரம்மாண்டமாய் காணப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 910

  சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

  கருவறை வெளிச்சுற்றில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
  கருவறையின் அதிஷ்டானப் பகுதியில் முப்பட்டைக் குமுத அலங்காரத்திற்கு மேல் சிறு பலகைச் சிற்பங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. இதில், நடன மகளிர், இசைக்கருவி வாசிக்கும் கலைஞர், காளிங்க நர்த்தனர், கஜசங்காரமூரத்தி, ரிஷபம், ஆடல்வல்லான், திரிபுராந்தகர், கஜலட்சுமி, சரசுவதி, அன்னம், அய்யனார், சிங்கம், யாளி, லிங்கோத்பவர் போன்ற சிற்பங்கள் சிறுறிய வடிவங்களில் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 1010

  சோழர்கால இசைக் கலைஞர்களின் பெயர்கள்... திருச்சி அருகே முக்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ள ஊர்!

  இங்குள்ள பிட்சாடனர் பிச்சை கேட்கும் திருக்கோலம் கொண்டு, கபாலம் ஏந்தி புன்னகை தவழ காட்சி அளிக்கிறார். இவருக்கு எதிர் திசையில் ஒருவர் அகப்பை ஏந்தி அன்னம் பாலிக்க நிற்கிறார். அவளது காலடியின் கீழ் பானைகள் வரிசையாக உள்ளன. இது தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் கர்வத்தை அடக்கும் புராண நிகழ்ச்சியைக் கூறுவதாக அமைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  MORE
  GALLERIES