முகப்பு » புகைப்பட செய்தி » திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

Trichy District Tourist Spots | தமிழ்நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக திருச்சி விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  திருச்சியில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் உள்ளன.

  • 19

    திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

    தமிழ்நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருச்சியில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அவை எல்லாவற்றிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பு மிக முக்கியமான 8 இடங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

    MORE
    GALLERIES

  • 29

    திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

    கல்லணை:
    கல்லணை திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது.

    MORE
    GALLERIES

  • 39

    திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

    புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி:
    புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி புளியஞ்சோலை தமிழ்நாட்டின், கிழக்கு தொடர்ச்சி மலை கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது திருச்சியில் இருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள நகரம் துறையூர். இது சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 49

    திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

    வண்ணத்துப்பூச்சி பூங்கா:
    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் சுமார் 8.00 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 59

    திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

    நாதிர்ஷா தர்கா:
    ஆயிரம் ஆண்டு பழமையான இந்த தர்கா இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு “உர்ஸ்” என்ற திருவிழா வெகுச்சிறப்பாக நடைபெறும். தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்தும் மக்கள் இங்கு நடைபெறும் திருவிழாவை காண வருகை புரிகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 69

    திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

    பச்சமலை:
    துறையூர் அருகே அமைந்த ஒரு பசுமை மலைத்தொடர்தான் பச்சமலை. இயற்கையை ரசிக்க இது ஓர் மிகச்சிறந்த இடமாகும். இங்கு வசிக்கும் பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.

    MORE
    GALLERIES

  • 79

    திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

    ஜம்புகேஸ்வரர் கோவில்:
    திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரம் திருவானைக்காவல். இங்குதான் ஜம்புகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் நீருக்குரிய தலம் இதுவாகும்.

    MORE
    GALLERIES

  • 89

    திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

    வயலூர் முருகன் கோவில்:
    வயலூர் முருகன் கோவில் திருச்சி மாநகரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள சக்தி தீர்த்தம் முருக பெருமான் தமது வேலால் குத்தி உருவாக்கியது என கூறுவர். திருமண தடைகளை போக்கும் தலமாக இதனை போற்றுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 99

    திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

    மலைக்கோட்டை கோவில்:
    மலைக்கோட்டை கோவில் ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றின்மீது கட்டப்பட்ட கோட்டை ஆகும். கோவில்கள் என்பவற்றை கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதை சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES