சோழர்களின் வெற்றி தெய்வம்... திருச்சி உக்கிர காளியம்மன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?
Trichy Ukkira MaahaliAmman Temple | சோழ மன்னர்கள் வெற்றி தெய்வமாக கருதி வழிபட்ட உக்கிர காளியம்மன், திருச்சி மாவட்டம் தென்னூரில் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலின் சிறப்பை இங்கே காணலாம்.
மாவட்டம் தென்னூரில் புகழ்பெற்ற உக்கிர மாகாளியம்மன் கோவில் இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்த (மகிஷாசுரமர்த்தினி) கோலத்தில் எட்டு கரங்களுடன் அம்மன் வடக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
2/ 9
அரக்கனை வதம்செய்த இந்த மகிஷாசுரமர்த்தினி ‘உக்கிர காளியம்மன்’ என்று அழைக்கப்பட்டாலும், இங்கே கருணையின் வடிவாய் இருந்து, பக்தர்களின் மனக்குறையை தீர்த்துவைக்கும் காவல் தெய்வமாகவே விளங்குகிறார்.
3/ 9
உக்கிர காளியம்மனின் வலது புறம் சந்தன கருப்பண்ணசாமியும், இடது புறம் உற்சவ அம்பாள் சன்னிதியும் அமைந்துள்ளன. இங்கே விஷ்ணு துர்க்கை, சப்த கன்னியர், மதுரைவீரன், சங்கட விமோசன ஆஞ்சநேயர், சாம்புகமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
4/ 9
இந்த உக்கிரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் உற்சவ காலங்களில் அம்பாள் உலா வருகையில், அவருக்கு முன்னும், பின்னுமாக அரணாக கருப்பண்ணசாமியும், சாம்புகமூர்த்தியும் செல்வது வழக்கம். இத்தகைய உலாவை காண்பதற்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும்.
5/ 9
இந்த கோவிலில் திருவோடு மரம் இருக்கிறது. அது, இதன் தனிச்சிறப்பாக போற்றப்படுகிறது. வன்னி மரத்தை தல விருட்சமாகக் கொண்ட இந்த க்கிரகாளியம்மன், முற்கால சோழ அரசர்களால் வெற்றி தெய்வமாக போற்றப்பட்டு, பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
6/ 9
சோழ அரசர்களால் வழிபட்ட உக்கிரமாகாளியம்மன் சிலை காலப்போக்கில் ஆற்றில் அடித்துவரப்பட்டு தென்னூரில் கரை ஒதுங்கியதாகவும், அந்த சிலையை எடுத்த அப்பகுதி மக்கள் அம்மனுக்கு இங்கேயே கோவில் அமைத்து வழிபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
7/ 9
இந்த உக்கிரமாகாளியம்மனை மனம் உருகி வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் தொல்லை நீங்கும் என்றும், குழந்தைப்பேறு இல்லாத தம்பதி அம்மனை மடியேந்தி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும், கண் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் தீரும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
8/ 9
பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து, அம்மனுக்கு புடவை சாத்தி வழிபடுகின்றனர். அமாவாசை, பவுர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆடு, கோழி ஆகியவையும் பலியிடப்படுவது வழக்கம்.
9/ 9
இங்கே பொதுவாக அம்மன் கோவில்களில் நடைபெறும் அனைத்துவித திருவிழாக்களும் நடைபெறும். பங்குனி மாதம் இரண்டாம் வாரத்திற்குப் பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெறும். அதன் பின்னர் 15 நாட்களுக்கு அம்பாள் விரதம் இருப்பதாக ஐதீகம். அந்த நாட்களில் எவ்வித பூஜைகளும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
19