சிந்தாமணியையும் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் மாநகரின் பிரதான போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. ஆனாலும், பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மீண்டும் பாலம் பழுதடைந்தது.
நேற்று முதல் நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதற்கே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வோர் அதிகளவு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தியதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. பராமரிப்பு பணிகள் 5 மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.