ஹோம் » போடோகல்லெரி » திருச்சி » உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

Uraiyur vekkaliamman | திருச்சியில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில், பக்தர்கள் தங்களின் மனக்குறை குறைகளையும், கோரிக்கைகளையும் ஒரு சீட்டில் எழுதி அம்மனுக்கு முன்பு இருக்கும் திரிசூலத்தில் கட்டி வழிபடுகின்றனர். 

 • 18

  உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

  யில் காவிரி ஆற்றின் தென்கரையில், திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது உறையூர். இவ்வூருக்கு வாசபுரி, கோழியூர், மூக்கீச்சுரம் ஆகிய சிறப்பு பெயர்களும் இருக்கின்றன. இங்கிருக்கும் வெக்காளியம்மன் சன்னதி மேற்கூரை இல்லாமல் காட்சியளிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 28

  உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

  திருச்சியில் உள்ள இந்த உறையூர் முற்கால சோழர்களின் தலைநகராகவும் விளங்கியது. இந்த ஊரை பராந்தக சோழன் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தபோது, சாரமா என்ற முனிவர் அங்கே அழகிய பூஞ்சோலை அமைத்து அதில் கிடைக்கும் மலர்களை பறித்து நாள்தோறும் தாயுமானவரை வழிபாடு செய்துவந்தாராம்.

  MORE
  GALLERIES

 • 38

  உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

  இந்நிலையில், பூந்தோட்டத்தில் பூக்களை யாரோ பறித்துச் செல்வதை கண்டு வருத்துடன் இருந்தபோது, ஒருநாள் பூக்களை பறித்து கொண்டிருந்த ஒருவன் பிடிபட்டானாம். இதுகுறித்து அவனிடம் விசாரித்தபோது, பராந்தக சோழ மன்னன்தான் பூக்களை பறித்து வரச் சொன்னதாக கூறினானாம்.

  MORE
  GALLERIES

 • 48

  உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

  இதனால், சாரமா முனிவர் மன்னரிடம் சென்று, ஏன் தனது மலர்களை பறித்து வரச் சொன்னீர்கள் என்று கேட்டபோது, மன்னர் சாரமா முனிவரை அலட்சியமாக நடத்தி அவமானப்படுத்தினாராம்.  இதனால் வருத்தம் அடைந்த சாரமா முனிவர், தாயுமானவரை நோக்கி தவமிருந்து தனது மனக்குறையை முறையிட்டாராம். தனது பக்தனின் துயரத்தை கண்டு கோபம் அடைந்த இறைவன் சோழநாட்டின் மீது மண்ணை மழையாக பொழிய செய்தாராம். இதனால், மக்களின் வீடுகள் யாவும் மண்ணால் நிரம்பியதாம். இதனால் மக்கள் வீட்டை இழந்து வெட்ட வெளிக்கு வந்தார்களாம்.

  MORE
  GALLERIES

 • 58

  உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

  மக்களின் இந்த துயர நிலையை கண்டு, ஊருக்கு வெளியே இருந்து மக்களை காத்தருளும் வெக்காளியம்மன், மனம் பதைபதைத்து, தாயுமானவரான இறைவனிடம் சென்று முறையிட்டு மக்களின் துயரத்தை போக்கினாராம். அப்போது, மக்களாகிய நீங்கள் அனைவரும் என்றைக்கு கூரையுடன் கூடிய வீடுகளில் வாழ்கிறீர்களோ அதுவரை நானும் திறந்த வெட்டவெளியில்தான் நிற்பேன் என்று கூறினாராம் வெக்காளியம்மன். அதனால், இந்த கோவிலுக்கு மேற்கூரை இன்றி காணப்படுவதாக சொல்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

  சக்தி வாய்ந்த அம்மன் என்று போற்றப்படும் இந்த வெக்காளியம்மன், வலது காலை மடிமீது மடித்து இடதுகாலில் அரசுனை மிதித்துக் கொண்டிருக்கிறாள். இந்த கோவிலில், ஆவணி மாதத்தில் மகா சர்வசண்டி ஹோமம் நடத்தப்படுகிறது. சித்திரை மாதத்தில் ஐந்து நாட்கள் விழா, பங்குனி மாதத்தில் பூச்சொரிதல் விழா, நவராத்திரி விழா, தை வெள்ளி மற்றும் ஆடி வெள்ளி வெள்ளிக்கிழமைகளில் விழாக்கள் கொண்டாப்படுகின்றன.

  MORE
  GALLERIES

 • 78

  உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

  கோபம் கொண்டு மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் தீர்க்க நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எழுப்பிய பத்தினிக் கோட்டமே இப்போது வெக்காளியம்மன் கோயிலாக என்றும் கூறப்படுகிறது. இதனால் வெக்காளி கண்ணகியே என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம், சோழர்களின் குல தெய்வமாகவும் போர்க்கடவுளாகவும் வெக்காளி எனும் கொற்றவை விளங்கியதாகவும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

  MORE
  GALLERIES

 • 88

  உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

  இந்த கோவிலில், பக்தர்கள் தங்களின் மனதில் இருக்கும் குறைகளையும், கோரிக்கைகளையும் ஒரு சீட்டில் எழுதி அம்மனுக்கு முன்பு இருக்கும் திரிசூலத்தில் கட்டி விடுகின்றனர். இதன்மூலம் குறைகள் நிவர்த்தியாகி கோரிக்கைகைளும் நிறைவேறும் எனறு நம்புகின்றனர். அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடை நீங்கும் என்கின்றனர். மேலும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

  MORE
  GALLERIES