உச்சிபிள்ளையார் கோவில்:
திருச்சியில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உள்ளன. கரிகால சோழ மன்னனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை இன்றும் சோழர்களின் பெருமையை பறைசாற்றி கொண்டிருக்கிறது. திருச்சியின் முக்கிய இடமாக மலைக்கோட்டை கருதப்படுகிறது. 83 மீட்டர் உயரத்தில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இதனால் திருச்சி மலை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் மீது உச்சி பிள்ளையார் கோவில் உள்ளது.
சோழர்களின் வசம் சென்ற திருச்சி:
திருச்சி நகரம் சோழர்களின் அரணாக விளங்கியது. திருச்சி பல்லவர்கள் கையில் இருந்தபோது அதை தக்க வைக்க கடும் முயற்சி செய்தனர். இருந்தும் பாண்டியர்கள்
பலமுறை திருச்சியை கைப்பற்றினர்.
இறுதியில் 10ம் நூற்றாண்டில் திருச்சி சோழர்கள் வசம் வந்தது. விஜயநகர பேரரசிற்கு பின் திருச்சி, மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கைப்பற்றினர். தொடர்ந்து மராட்டியர்கள், கர்நாடக நவாப்கள், பிரெஞ்ச் ஆதிக்கம் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர்.
மலைக்கோட்டையை சுற்றி அமைவு:
திருச்சி மாநகரம் மலைக்கோட்டையை சுற்றி அமைந்துள்ளது. மலைக்கோட்டையை தவிர சர்ச்சுகள், கல்லூரிகள் மற்றும் சமுதாய நல அமைப்புகள் பல 1760ம் ஆண்டுகளிலேயே அமைக்கப்பட்டன. சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட நகரமான திருச்சி தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்குகிறது.
திருச்சி நகரம் காவிரி கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமாக திருச்சி விளங்குகிறது. திருச்சி தமிழகத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது.
திருச்சி தலங்கள்:
திருச்சி மாநகராட்சி திருச்சி நகரை மையமாக கொண்டு செயல்படுகிறது. திருச்சி , ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகும். பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் இங்கு தான் உள்ளது. திருவானைக்காவல் நீருக்கான தலமாகும். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் திருவானைக்காவலில் தான் பிறந்தார். அவருடைய வீடு அருங்காட்சியகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.