முகப்பு » புகைப்பட செய்தி » திருச்சி » திருச்சி பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

Tiruchirappalli | திருச்சி மாவட்டத்தின் பச்சமலையில், 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

  • 19

    திருச்சி பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

    மாவட்டம் துறையூர் அருகே பச்சமலை அமைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மலையான இது, கடல் மட்டத்திலிருந்து 1,072 மீட்டா் உயரத்தில், 5,247 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 29

    திருச்சி பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

    பச்சமலையில் வனவிலங்குகள், பறவை இனங்கள், வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. இவை குறித்து வனத்துறையினர் அவ்வப்போது கணக்கெடுப்பு மேற்கொள்வது வழக்கம்.

    MORE
    GALLERIES

  • 39

    திருச்சி பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

    அதன்படி, திருச்சி மண்டலத் தலைமை வனப் பாதுகாவலா் சதீஷ் அறிவுறுத்தலின் பேரில், கடந்த ஆகஸ்ட் 13,14 ஆகிய தேதிகளில், மாவட்ட வன அலுவலா் கிரண் தலைமையில், துறையூா் வனச்சரக அலுவலா்கள் மற்றும் கோயம்புத்தூரைச் சோ்ந்த "தி நேச்சா் அண்ட் பட்டா்ஃபிளை சொசைட்டி" (டிஎன்பிஎஸ்) ஆய்வுக் குழுவினா் பாவேந்தன், தெய்வப்பிரகாசம், ஈசுவரன் குமாா், நிஷாந்த், ரமணாசரண், சதீஸ்குமாா் ஆகியோா் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.

    MORE
    GALLERIES

  • 49

    திருச்சி பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

    டாப் செங்காட்டுப்பட்டி, மங்களம் அருவி, செண்பகம் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில், 109 வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டு, புகைப்படங்களாக பதிவு செய்து, ஆவணப்படுத்தப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 59

    திருச்சி பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

    'பச்சமலையில் கடந்த 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 105 வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டன. தற்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 109 வண்ணத்துப்பூச்சி வகைகள், அதாவது, 4 வகை பூச்சிகள் அதிகம் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 69

    திருச்சி பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

    இந்த இரு கணக்கெடுப்பிலுள்ள வண்ணத்துப்பூச்சிகளின் குடும்ப வகைகளை ஒப்பிட்டுப் பாா்த்தால், இங்கு, 127 வகையான வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 79

    திருச்சி பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

    இரு நாl;களில் மேற்கொண்ட ஆய்விலேயே, 109 வகை வண்ணத்துப்பூச்சிகள் காணமுடிகிறது. தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொண்டால், 175 வகையான வண்ணத்துப்பூச்சி வகைகளை கண்டறிய வாய்ப்புள்ளது' என்று ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

    MORE
    GALLERIES

  • 89

    திருச்சி பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

    தற்போது, கண்டறியப்பட்டுள்ள, 109 வகையான வண்ணத்துப்பூச்சிகளில் குறிப்பிட்ட, 6 வகையைச் சோ்ந்த பூச்சிகளிலிருந்துதான் பிற வகைகள் உருவானதாக தெரியவந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 99

    திருச்சி பச்சமலையில் 109 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

    அதாவது, வஸ்வாலோடெயில்ஸ் வகையிலிருந்து 10, வெள்ளை மற்றும் மஞ்சள் (16), தூரிகை-கால் பட்டாம்பூச்சிகள் (35), ப்ளூஸ் (24), மெட்டல்மாா்க்ஸ் (1) மற்றும் ஸ்கிப்பா்ஸ் வகையிலிருந்து, 23 என்ற அளவில் பிரிவுகள் காணப்படுவதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

    MORE
    GALLERIES