முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » 14கிமீ தூரம்.. ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை.. இத்தனை அம்சங்கள் இருக்கா.?

14கிமீ தூரம்.. ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை.. இத்தனை அம்சங்கள் இருக்கா.?

ஜோசிலா கணவாய்க்கு கீழ் 3000 மீட்டருக்கு கீழ் 14.15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையானது அமைக்கப்பட்டு வருகிறது.

  • 17

    14கிமீ தூரம்.. ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை.. இத்தனை அம்சங்கள் இருக்கா.?

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இடையில் பொருளாதார வளர்ச்சி, சமூக கலாச்சார ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் விதமாக ஜம்மு மற்றும் லே இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 1 ல் எவ்வித தடையின்றி போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என அரசு முடிவெடுத்தது.

    MORE
    GALLERIES

  • 27

    14கிமீ தூரம்.. ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை.. இத்தனை அம்சங்கள் இருக்கா.?

    தற்போது தேசிய நெடுஞ்சாலையானது இப்பகுதிகளுக்கிடையே செயல்பட்டாலும் அதிக பனிபொழிவு மாதங்களில் அதாவது ஆண்டுக்கு 6 மாதங்களுக்கு போக்குவரத்து இப்பகுதியில் இருக்காது. 6 மாத கால மட்டுமே போக்குவரத்து சேவையானது இயக்கப்படுவதால் மக்களின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    14கிமீ தூரம்.. ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை.. இத்தனை அம்சங்கள் இருக்கா.?

    இதன் படி ஜோசிலா கணவாய்க்கு கீழ் 3000 மீட்டருக்கு கீழ் 14.15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையானது அமைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக உள்ள நெடுஞ்சாலை போலில்லாமல் அதிக பனிப்பொழிவு, குளிர், என எத்தகைய வானிலையிலும் இந்த தேசிய நெடுஞ்சாலையானது இயங்கும் என்றும், இதற்கேற்ப தான் இதன் கட்டுமானப் பணிகள் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த பாதையை மக்கள் ஜம்மு மற்றும் லடாக் இடையே போக்குவரத்து சேவைக்குப் பயன்படுத்தும் போது பயண நேரம் என்பது 4 மணி நேரத்திலிருந்து 40 நிமிடமாக குறையும் எனவும் அரசு தெரிவிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 47

    14கிமீ தூரம்.. ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை.. இத்தனை அம்சங்கள் இருக்கா.?

    ஜோசிலா சுரங்கப்பாதையானது ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையாக அமையும் எனவும், ஏற்கனவே கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட பாதி முடிந்து விட்டதால், திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்பே திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய சுரங்கப்பாதையாக இது இருக்கும் எனவும், ஜம்மு காஷ்மீர், லடாக் இடையே பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக கலாச்சார ஒருங்கிணைப்பை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்கின்றனர் மத்திய அமைச்சர்கள்.

    MORE
    GALLERIES

  • 57

    14கிமீ தூரம்.. ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை.. இத்தனை அம்சங்கள் இருக்கா.?

    ஆசியாவிலேயே மிக நீளமான ஜோசிலா சுரங்கப்பாதை அமைப்பதற்கானத் திட்டத்தை எல்லைகள் சாலை அமைப்பு, கடந்த 2013 ஆம் ஆண்டு தயாரித்தது. இதனையடுத்து இதற்கான டென்டர் எடுக்கப்பட்ட போது 4 முறை தோல்வியில் தான் முடிந்தது. பின்னர் இறுதியாக இந்த சுரங்கப்பாதைக்கான டென்டர் ஐடிஎன்எஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டதோடு, இப்பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் பிரதமர் மோடி.

    MORE
    GALLERIES

  • 67

    14கிமீ தூரம்.. ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை.. இத்தனை அம்சங்கள் இருக்கா.?

    இருந்த போதும் நிதி நெருக்கடி காரணமாக இப்பணிக்கான டென்டர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தான் மீண்டும் தற்போது மத்திய அரசு மறு ஆய்வு செய்ததையடுத்து இந்த சுரங்கப்பணிக்கான டென்டரை ரூபாய் 4509.50 கோடிக்கு மெகா இன்ஜினியரிங் நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 77

    14கிமீ தூரம்.. ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை.. இத்தனை அம்சங்கள் இருக்கா.?

    தற்போது பெரும்பாலான பணிகள் துரிதமாக நடைபெற்றுவரும் நிலையில் வருகின்ற 2026-க்குள் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயம் இந்த மேம்பாலம் உலக மக்களுக்கிடையே வியப்பை ஏற்படுத்துவதாகவே அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

    MORE
    GALLERIES