பேர்ள் என்ற இந்த குட்டி நாய்க்கு விதவிதமான ஆடைகள் அணிவது என்றால் கொள்ளைப் பிரியமாம். சிக்கன் மற்றும் சால்மன் மீன் பேர்ளின் விருப்ப உணவாம். அண்மையில் பேர்ளை செம்லர் இத்தாலியின் மிலன் நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இந்த நாயை இத்தாலியின் பிரபல தொலைக்காட்சி ஒன்று அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்துச் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடியும் வரை சமர்த்தாக அமர்ந்திருந்தது பேர்ள்.
கின்னஸ் நிறுவனம் பேர்ள் குறித்த 3 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் க்யூட்டாய் குட்டியாய் இருக்கும் பேர்ளை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். இந்த நாய் எங்களுடன் இருப்பது எங்கள் பாக்கியம் என்று சிலாகித்து சொல்லியிருக்கிறார் உரிமையாளர் வனேசா செம்லர்.