ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் உள்ள பகுதி தான் ஆராவுனே. சகாரா பாலைவனத்தின் முகப்பில் அமைந்திருக்கும் இந்த பகுதியில் சுமார் 300 பேர் வசிக்கின்றனர். சுற்றிலும் பாலைவனமாக காட்சியளிக்கும் இந்த பகுதியில் சராசரி வெப்ப நிலையே 46 டிகிரி செல்சியஸ் தான். திடீரெனெ வீசும் மணல் புயல், ஒரு சில நிமிடங்களிலேயே உங்களை மண்ணுக்குள் புதைத்து விடும். ஆனால் கனிம வளங்களை கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாக இருப்பதால், இங்கு மனிதர்கள் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது.
ரஷ்யாவில் உள்ள ஒய்மியாகூன் பகுதி உலகிலேயே மனிதர்கள் வசிக்கும் மிக குளிர்ந்த பகுதியாகும். பகல் வேலைகளில் சுமார் 3 மணி நேரம் மட்டுமே வெளிச்சம் இருக்கும். சுமார் 500 பேர் வசிக்கும் இந்த பகுதியில் சராசரி வெப்ப நிலையே எப்போதும் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் ஆகும். மீன் பிடிப்பது தான் இம்மக்களின் முக்கியத்தொழிலாம்.
காற்றில் விஷம் இருக்கும் என்று கேள்விபட்டிருப்போம். ஆனால் பெருவில் உள்ள லா ஒரோயா பகுதியில் உண்மையிலேயே காற்றில் அபாயகரமான வேதிப்பொருட்கள் உள்ளது. அதாவது அர்சினிக், லெட், சல்பர்டை ஆக்சைடு போன்ற தனிமங்கள் அளவு மிக அதிகமாக இருப்பதால் அவ்வப்போது இங்கு அமில மழை பெய்யுமாம். இதனால் இப்பகுதியில் எந்த விதமான விவசாயமும் செய்ய முடியாது. இங்கு செயல்படும் தங்க சுரங்கங்களே இது போன்ற நிலைக்கு காரணம். ஆனாலும் இங்கு 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
டிரிஸ்டன் ட குன்ஹா என்ற பகுதி தான் உலகின் மிக தொலைவில் உள்ள தீவுப்பகுதியாகும். இங்கு விமானம் இறங்க வசதி இல்லததால், இந்த தீவுக்கு செல்ல படகில் மட்டுமே போக முடியும். தென்னாப்ரிக்காவில் இருந்து இங்கு செல்ல 2,340 கிமீ பயணம் செய்ய வேண்டும் அதாவது 6 நாள் பயணமாம். ஆனாலும் இங்கு 246 பேர் வசிக்கிறார்கள்.
அடுத்ததாக உலகில் மிக உயரத்தில் உள்ள மனித குடியிருப்பு.. அப்படீன்னா அது, பெருவில் உள்ள லா ரினகொண்டா தான். இங்கு 5,100 மீட்டர் உயரத்தில் நகரம் உள்ளது. தங்க சுரங்கம் உள்ளதால் இங்கு ஏரளமானவர்கள் வந்து வசிக்கிறார்கள். ஆனால் இங்கு எந்தவிதமான ஹோட்டல்களும், விடுதிகளும் கிடையாது. 3,000 மீட்டரை கடந்ததுமே சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் பலர் இங்கு செல்வது சிரமம். இங்கு செல்ல சாலைவசதி கூட இல்லை. ஆனாலும் இங்கு 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.