மாஸ்டர் கார்டு என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆய்வின் உலகின் சிறந்த டாப் 10 நகரங்களை வெளியிடும். 200 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் நகரங்களின் தனித்தன்மை மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கொண்டு டாப் 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2/ 11
10. துருக்கி, அன்டால்யா : 12.41 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். மத்திய தரைக்கடல் ரிசார்ட் நகரத்தில் அமைந்துள்ள பழைய துறைமுகத்தில் உள்ள சுற்றுலா படகுகள் (Image: Reuters)
3/ 11
9. ஜப்பான், டோக்கியா : 12.93 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சீன சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக செல்ஃபி எடுத்து கொள்கின்றனர். (Image: Reuters)
4/ 11
8. துருக்கி, இஸ்தான்புல் : 13.40மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அங்குள்ள பழமையான மசூதி முன் செல்ஃபி எடுத்து கொள்ளும் பெண்கள். (Image: Reuters)
5/ 11
7. அமெரிக்கா, நியூயார்க் : 13.60 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுதந்திர தேவி சிலைக்கு முன் போஸ் கொடுக்கும் ஜப்பானியர்கள். (Image: Reuters)
6/ 11
6. மலேசியா, கோலாலம்பூர் : 13.79 மில்லியன் பேர் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். (Image: Reuters)
7/ 11
5. சிங்கப்பூர் : 14.67 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்தள்ளனர். மெர்லியன் பார்க் முன் புகைப்படம் எடுத்து கொள்ளும் சுற்றுலாப் பயணிகள். (Image: Reuters)
8/ 11
4.ஐக்கிய அரபு நாடு, துபாய் : 15.93 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜூமேரா கடற்கரையில் ஒட்டகங்களுடன் புகைப்படம் எடுக்கும் சுற்றுலாப் பயணிகள். (Image: Reuters)
9/ 11
3. பிரிட்டன், லண்டன் : 19.09 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். (Image: Reuters)
10/ 11
2. பிரான்ஸ், பாரிஸ் : 19.10 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு வெளியே உள்ள பிரமிட் கூம்பு முன் சுற்றுலாப் பயணிகள். (Image: Reuters)
11/ 11
1. தாய்லாந்து, பாங்காக் : 22.78 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனர். உலகின் மிகவும் பிரபலமான நகரங்களில் பாங்காக் முதன்மையாக உள்ளது. தொடர்ந்து 4 வருடங்களாக பாங்காக் முதலிடத்தில் உள்ளது. (Image: Reuters)