யுகே-வை சேர்ந்த பெண்மணி ஒருவர் பேயை திருமணம் செய்து கொண்டதாக கூறிய விசித்திர சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது அந்த பேயிடமிருந்து விவாகரத்தும் கேட்டுள்ளார். ராக்கர் ப்ரோக்கார்டி என பெயர் கொண்ட அப்பெண் எட்வர்டோ என்ற ஆண் பேயுடன் கடந்த 2022-ஆம் ஆண்டு ஹாலோவீன் திருவிழாவின் போது ஒரு கைவிடப்பட்ட தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டாராம்.
இதற்குக் காரணம் கணவரான அந்த பேயானவர் அப்பெண்மணியின் வாழ்க்கையை நரகமாக மாற்றி விட்டாராம். மேலும் இவர்களது பிரிவை அறிவித்ததில் இருந்து அந்த பெண்மணி எங்கு சென்றாலும் பின் தொடர்வதும் பயமுறுத்துவதுமாக இருந்துள்ளார். தற்போது வரை எங்கு சென்றாலும் அப்பெண்ணின் பேய் கணவர் இவரை பின் தொடர்ந்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தற்போது தனக்குத்தானே பேய் ஓட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் அவர் இறங்கியுள்ளார்.
மேலும் தன்னுடைய திருமண நிகழ்வு பற்றிய அவர் கூறுகையில்” எங்களுடைய திருமணத்திற்கு உயிரோடு இருப்பவர் மற்றும் இறந்தவர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் இவர்களது திருமணத்திற்கு பல்வேறு இறந்த பிரபலங்களும் வருகை தந்தார்களாம். அதிலும் குறிப்பாக இவரது பேய் கணவருக்கு இறந்த பிரபலம் நடிகையான மார்லி மன்றோ வருகை தந்திருக்கிறார். மார்லின் மன்றோவின் அழகை குறித்து அவரது கணவர் அளித்த ஒரு கமெண்ட் இவருக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை.
மேலும் இவர்களது ஹனிமூன் பற்றி கூறுகையில், அது மிக மிக ஒரு மோசமான அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார். “என்னுடைய பேய் கணவர் மிகவும் ரொமான்டிக்காகவும் அன்பாகவும் இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அது அவ்வாறு நடக்கவில்லை. என்னுடைய ஐஸ் கிரீமை அவருடன் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்தபோது, அந்த ஐஸ்கிரீம் என் முகம் முழுவதும் பரவுமாறு அவர் செய்துவிட்டார். என்னுடைய தலைமுடி முகம் என அனைத்து பகுதிகளிலும் ஐஸ்கிரீம் ஆகிவிட்டது. மேலும் அதனோடு மண்ணும் சேர்ந்து நான் மிகப்பெரிய கடல் பறவையுடன் சண்டையிட்டதை போல காட்சியளித்தேன்” என்று அப்பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்தாலும் தன்னுடைய இந்த விவாகரத்து முடிவை அறிவிப்பதற்கு முன், தன்னுடைய பேய் கணவரிடம் தங்களது திருமண உறவே சீரியசாக எடுத்துக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்தாராம். ஆனால் அந்த பேய் கணவர் எதையும் காது கொடுத்து கேட்கவில்லையாம். மேலும் அந்த பேய் தினமும் அப்பெண்மணியின் கனவில் வந்து குழந்தையை போல பயங்கரமாக அழுது பயமுறுத்தி வருகிறதாம். அனைத்தையும் தாண்டி தன்னுடைய கணவரை சந்திக்கும் வரை அவருக்கு அமானுஷ்யங்களின் மீது நம்பிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த செயலும் இவர் கூறும் விஷயங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.