இன்றைக்கு பேருந்து, கார்களில் எத்தனை வசதிகள் இருந்தாலும் அதில் நெடுந்தூரம் பயணிப்பது என்பது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. உங்களது பயணத்தை நீங்கள் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல், சந்தோஷமாக மேற்கொள்ள வேண்டும் என்றால், ரயில் பயணம் தான் உங்களுக்குத் தான் ஏற்றதாக அமையும். இதோடு குறைந்த செலவில் உடல் வலி எதுவும் இல்லாமல் செல்வதற்கு ஏற்றவகையில் ரயில் பயணம் நிச்சயம் அமையும். அனைத்துத் தரப்பட்ட மக்களும் பயன்படுத்தும் வகையில் பல வசதிகள் இந்திய ரயில்வே துறையில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக நீங்கள் எந்த நாள் மற்றும் நேரத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
இவ்வாறு ரயில் பயணத்தில் பல்வேறு வசதிகள் இருப்பதால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தாலும், பெரும்பாலான நேரத்தில் ரயில்களை நாம் தவறவிடுவது வழக்கம். இப்படி ஒரு நிலையில், நீங்கள் ரயிலைத் தவறவிட்டால் உங்களது முன்பதிவு இருக்கைக்கு என்ன நடக்கும்? என்று ரயில் டிக்கெட் பரிசோதகர் என்ன செய்வார்? என நீங்கள் யோசித்தது உண்டா? மேலும் நீங்கள் ரயிலைத் தவறவிட்ட பிறகு வேறு நிலையத்திலிருந்து ரயிலில் ஏற முடியுமா? உஎன்பது குறித்து இங்கே முழுமையான தகவல்கள் இங்கே..
முன்பதிவு ரயிலைத் தவறவிட்டால் என்ன நடக்கும்? : உங்கள் ரயிலை நீங்கள் தவறவிட்டால், உங்கள் இருக்கையை வேறொருவருக்கு ஒதுக்க ரயில் டிக்கெட் பரிசோதகருக்கு உரிமை உண்டு. இருந்தாலும், உடனே இந்த இருக்கையில் உங்களால் அமர முடியாது என்பது இல்லை. நீங்கள் காரிலோ அல்லது பைக்கிலோ? சென்று அடுத்த ரயில் நிலையத்திற்கு நீங்கள் சென்று உங்களது முன்பதிவு இருக்கையில் அமர்ந்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீங்கள் ஏறுவதற்காக பதிவு செய்துள்ள ரயில் நிலையத்தைத் தவிர பின்வரும் இரண்டு நிலையங்கள் வரை உங்களது டிக்கெட்டுகளை டிடிஆர் யாருக்கும் மாற்றிக்கொடுக்க மாட்டார். அதன் பிறகு தான் RAC எனப்படும் காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு உங்களது முன்பதிவு இருக்கைகள் வழங்கப்படும்.
ஒருவேளை நீங்கள் முன்பதிவு செய்து தவறவிட்ட ரயிலைப் பிடிக்க முடியவில்லை என்றால், , டிக்கெட்டின் அடிப்படை விலையில் பாதியைத் திருப்பிக் கோரலாம். மேலும் ரயில் புறப்படும் நிலையத்திலிருந்து மூன்று மணிநேரம் கடந்த பிறகு உங்கள் டிக்கெட்டை ரத்துசெய்து TDRஐச் சமர்ப்பித்தால் உங்கள் பணத்தில் பாதியைப் பெறுவதற்கான வசதிகள் உள்ளது. எனவே நீங்கள் முன்பதிவு செய்த ரயிலைத் தவறவிட்டு விட்டோம் என்ற கவலை வேண்டாம். இந்த மாதிரி பாலோ பண்ணிடுங்க போதும்.