அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தனது தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், இஸ்லாமியர்களுக்கு வேறு இடம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. இது தொடர்பான செய்திகள் கூகுள் தேடுதல் பட்டியலில் 9-ம் இடத்தை பிடித்துள்ளது.