நீண்ட காலமாக ஒட்டுமொத்த உலகிற்கே ஒரு கேள்விக்கான பதில் புதிராகவே இருந்து வருகிறது. தக்காளி என்பது உண்மையில் என்ன? அது ஒரு பழமா அல்லது காய்கறியா?இந்த கேள்விக்கு அவ்வளவு சலபமாக பதில் அளித்து விட முடியாது. இது சம்மந்தமான இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. ஒருதரப்பு தக்காளி உண்ணக்கூடியது என்பதாலும், அதில் கொட்டை இருப்பதாலும் அது பழம் தான் என்கிறது. மற்றொரு தரப்பு, சமைத்து உண்ணப்படுவதால் அது காய்கறிதான் என்கிறது
உலக அளவில் பலரால் நுகரப்படும் தக்காளியை பயிரிடுவது சுலபம். தக்காளியானது ஐரோப்பா முழுவதும் காணப்படும் அட்ரோப்பா பெல்லடோனா என்ற நைட்ஷேட் தாவர வகையை ஒத்திருப்பதால் இதுவும் நைட்ஷேட் தாவரம் என்று அழைக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், குடை மிளகாய் போன்றவையும் நைட்ஷேட் தாவர வகையைச் சார்ந்தது. தக்காளியின் தாவரப் பெயர் லைக்கோபெர்சிக்கன் எஸ்குலன்டம் (Lycopersicon esculentum) ஆகும். தக்காளி ஒரு பழமா அல்லது காய்கறியா என்பதை தெரிந்து கொள்ள முதலில் நாம் அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகிய இரண்டுமே தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவுகள் ஆகும். இவற்றில் வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் நீர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகிய இரண்டுமே சமச்சீரான உணவின் முக்கியமான ஒரு பகுதியாகும்.'பழம்' என்று சொல்லானது விதைகளில் இருந்து பெறப்படும் பெரிய இனிப்பு சுவை நிறைந்த மற்றும் உண்ணக்கூடிய ஒரு பொருளாகும். பழங்களை பச்சையாகவும் சமைத்தும் உண்ணலாம். மறுபுறம் காய்கறிகளானது மரங்களிலிருந்து விதைகளில் இருந்து பெறப்படுவதில்லை.
தக்காளி என்பது என்ன? அது காய்கறியா அல்லது பழமா? : தக்காளி என்பது பழம் மற்றும் காய்கறி ஆகிய இரண்டுமே தான். அறிவியல் பூர்வமாக தக்காளி பழங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அது காய்கறியாகவும் கருதப்படலாம் என்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன. தக்காளியில் விதைகள் இருப்பதாலும், அது பூக்களில் இருந்து பெறப்படுவதாலுமே தக்காளி பழங்களுக்கு கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தக்காளி ஏன் ஒரு பழமாக கருதப்படுகிறது? : பழங்களின் வரையறையை நாம் பார்க்கும் போது, பழங்கள் என்பது மரங்கள் அல்லது தாவரங்களில் இருந்து பெறப்படும் இனிப்பு சுவை மற்றும் சதை பகுதியுடனான விதைகள் கொண்ட உண்ணக்கூடிய ஒரு தாவாரப்பகுதியாகும். மேலும் பழங்கள் பூக்களில் இருந்து பெறப்படுகின்றன. இப்போது தக்காளியை கருத்தில்கொள்ளும் போது, தக்காளி பூக்களில் இருந்து பெறப்படுகிறது. அதோடு அது சதைப்பகுதி கொண்டதாகவும், விதைகள் கொண்டதாகவும் அமைகிறது. ஆகையால் இது பழங்களின் கீழ் வகைப்படுத்தப் படலாம்.
தக்காளி ஏன் ஒரு காய்கறியாக கருதப்படுகிறது? : காய்கறிகள் என்பது தாவரம் அல்லது வேர்கள் தண்டுகள் இலைகள் போன்ற தாவரங்களின் ஒரு பகுதியாகும். இவற்றை சமைத்து உணவாக பயன்படுத்தலாம். 1983 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றமானது தக்காளியை நாம் சமைக்கும் விதம் கருதியும், பல்வேறு விதமான உணவுகளை செய்ய அது பயன்படுத்தப்படுவதாலும், அது காய்கறியாக வகைப்படுத்தப்படலாம் என்று கூறியது.
ஆகவே சட்டபூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் தக்காளியை காய்கறியாக கருதலாம். இறுதியாக, நீங்கள் தக்காளியை ஒரு பழமாகவோ அல்லது காய்கறியாகவோ கருதலாம். அது எதுவாக இருந்தாலும் தக்காளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அது நம் ஆரோக்கியத்திற்கு பல விதத்தில் நன்மைகளை அளிக்கக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை.