சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வரவேற்றனர். மோடியின் வருகையை முன்னிட்டு, பாஜக சார்பில் விமான நிலைய வளாகத்தில் மேள, தாளங்கள் முழங்க பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.