இதுகுறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற சவால் மிகுந்த விஷயத்தை ஆன்லைன் தளங்களில் பேசுவது எளிதானது. ஆனால், யதார்த்த உலகில் அந்த தடைகளை தகர்த்து செயலில் காட்டுவது கடினம். ஆகவே தான், இதைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், அதற்கு நானே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’’ என்றார் புஷ்பக் சென்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபேஷன் துறையில் வளர்ந்து வரும் நபர் என்ற விருது எனக்கு கிடைக்குமா? நான் விருது பெற விரும்புகிறேனா? இல்லை. பின்னர் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். வங்கத்தை, எனது பாரம்பரியத்தை, எனது தாய்மண்ணி்ன் கலைநயத்தை நான் பிரதிபலிக்க விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.