ஒரு நபரின் ஆளுமைத் திறனை எதையெல்லாம் வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு பல அளவீடுகள் இருக்கின்றன. ஒரு நபரின் பெர்சனாலிட்டி எப்படி இருக்கும் என்பது பற்றி சமீபத்திய ட்ரெண்டாக இருக்கும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களின் மூலம் ஒரு பக்கம் தெரிந்து கொண்டாலும், ஒருவருடைய தோற்றம், உருவத்தில் சில அமைப்புகள் உள்ளிட்ட பல விஷயங்களை வைத்தும் எளிதில் தெரிந்து கொள்ள முடியுமாம். அந்த வரிசையில், ஒருவர் பாதம் எந்த வடிவத்தில் இருக்கும் என்பதை வைத்து அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கலாம்.
மேலே உள்ள புகைப்படத்தில் மொத்தம் நான்கு வகையான பாத வடிவங்கள் உள்ளன. உங்கள் பாதம் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதைப் பார்த்து, உங்கள் ஆளுமைப் பண்புகள் மற்றும் குண நலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
எகிப்திய பாதம் :
உங்கள் பாதங்களில் காலின் கட்டைவிரல் பெரிதாகவும் அடுத்தடுத்த விரல்கள் சிறிய அளவில் அளவில் குறைந்து கொண்டே வருவது போன்ற காணப்பட்டால் உங்களுடைய பாதம் எகிப்திய பாதம் என்று கூறப்படுகிறது. அரசர்களின் பாதங்கள் இப்படித்தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உங்களுடைய பிரைவசியை யார் கெடுத்தாலும் நீங்கள் விரும்பமாட்டீர்கள். எகிப்திய பாத வடிவம் இருப்பவர்களுக்கு நிறைய ரகசியங்கள் இருக்கும். உங்களுடைய வாழ்க்கையை பற்றிய பல விஷயங்கள் வெளி உலகுக்கு தெரியாமலேயே இருக்கும். நீங்கள் நிறைய கனவு காண்பவராக இருப்பீர்கள். உங்களுக்காக நேரம் செலவழித்து கொள்வதற்கு உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
ரோமானிய பாதம்:
பாதங்களில் முதல் மூன்று விரல்கள் ஒரே அளவிலும் அடுத்த இரண்டு இரவுகள் அளவு குறைந்து காணப்படுவது ரோமானிய பாதம் என்று கூறப்படுகிறது. நீங்கள் மிகவும் ஜாலியான நபராக இருப்பீர்கள். புதிய அனுபவங்களை நீங்களே தேடிச் சென்று, வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர். நீங்கள் நிறைய நபர்களை சந்தித்து புதிய பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்களை தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். நேசிப்பவருக்கு மிகவும் நேர்மையான மற்றும் விசுவாசமான துணையாக இருப்பீர்கள். மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதற்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள். ரோமானிய பாதம் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் அழகான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விடுவார்கள். ஆனால் சில நேரங்களில் மிகவும் பிடிவாதம் பிடிப்பவராகவும் ஆக்ரோஷமானவராகவும் வெளிப்படுவீர்கள் என்பதால் உங்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.
கிரேக்க பாதம்:
உங்களுக்கு காலின் கட்டை விரலை விட இரண்டாம் விரல் நீளமாக இருந்தால் உங்களுடைய பாதம் கிரேக்க பாதம் அல்லது நெருப்பு பாதம் என்று கூறப்படுகிறது. நீங்கள் மிகவும் கிரியேட்டிவ் ஆன ஒரு நபராக இருப்பீர்கள். கலை மற்றும் படைப்பாற்றல் துறையில் சாதனை செய்வீர்கள். உங்களுக்கு நீங்களே மிகப்பெரிய ஊக்கமாகவும் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பவராகவும் இருப்பீர்கள். உங்கள் கனவுகளை அடைவதற்கு உங்களுடைய உள்ளுணர்வு உதவி செய்யும். உங்களுடன் இருப்பவர்கள் எப்போதும் சோர்வாக உணர மாட்டார்கள். பெரிதாக திட்டமிடாமல் சட்டென்று நீங்கள் எல்லா விஷயத்தையும் செய்து முடிப்பதில் வல்லவர்கள். கிரேக்க பாதங்களை கொண்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். அதே நேரத்தில் முடிவை எடுப்பதிலும் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். பலர் சொல்வதைக் கேட்டாலும் உங்கள் முடிவுகளை நீங்கள் தான் எடுப்பீர்கள்.
உழவர்கள் பாதம்:
காலில் உள்ள அனைத்து விரல்களும் ஒரே நீளத்தில் இருந்தால் உங்களுடையது சதுர வடிவ பாதம் அல்லது உழைப்பாளிகள் பாதம் என்று கூறப்படுகிறது. நீங்கள் மிகவும் பிராக்டிகல் ஆன நடைமுறையில் வாழ்பவர். உங்களை நம்பி எதை வேண்டுமானாலும் செய்யலாம் மற்றும் ரகசியங்களை பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் மிகவும் நேர்மையானவர். எந்த விஷயமாக இருந்தாலும் அதை தீவிரமாக ஆராய்ந்துதான் நீங்கள் முடிவெடுப்பீர்கள். ஆனால், இதனாலேயே நீங்கள் ஒரு சில விஷயங்கள் மிகவும் தாமதமாக விடும். இருப்பினும், எல்லாவற்றையும் நீங்கள் நுணுக்கமாக ஆராய்ந்து செய்வதால் நீங்கள் மற்றவர்களால் அவ்வளவு எளிதாக பாதிக்கப்பட மாட்டீர்கள். உங்கள் மீது உங்களுக்கு அதீத நம்பிக்கை உள்ளது.