ஒரு நபரின் ஆளுமைத் திறனை எதையெல்லாம் வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு பல அளவீடுகள் இருக்கின்றன. ஒரு நபரின் பெர்சனாலிட்டி எப்படி இருக்கும் என்பது பற்றி சமீபத்திய ட்ரெண்டாக இருக்கும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களின் மூலம் ஒரு பக்கம் தெரிந்து கொண்டாலும், ஒருவரின் உணவுப் பழக்கத்தில், விரும்பி உண்ணும் சுவை மற்றும் மாறுபாடுகள் உள்ளிட்ட பல விஷயங்களை வைத்தும் எளிதில் தெரிந்து கொள்ள முடியுமாம். அந்த வரிசையில், உங்களுக்கு எந்த வகையான காஃபி பிடிக்கும் என்பதை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ப்ளாக் காஃபி:
பால் சேர்க்காமல், அப்படியே குடிக்கக் கூடிய பிளாக் காபி பிரியராக நீங்கள் இருந்தால் காஃபி பர்சனாலிட்டி அடிப்படையில் நீங்கள் நோ-நான்ஸென்ஸ் என்று சொல்லக்கூடிய நேரடியாக எந்த விஷயத்தையும் அணுகும் தன்மை கொண்டவர். பழைய விஷயங்கள் பழைய முறைகளின் மீது உங்களுக்கு அதிக நம்பிக்கையும், அதைச் சார்ந்தும் நீங்கள் இருப்பீர்கள். உங்களுக்கு பொறுமை மிகவும் அதிகமாக இருக்கும். மற்றும் எந்த செயலை செய்தாலும் அதைச் சிறப்பாக செய்வீர்கள். உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது என்பதோடு மட்டுமில்லாமல் நீங்கள் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற சிந்தனையும் கொண்டிருப்பீர்கள். எல்லா விஷயத்தையும் நீங்கள் நேர்மறையாகவும் எளிமையாகவும் வைத்திருப்பீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடவே மாட்டீர்கள். நீங்கள் உங்களுடைய கட்டுப்பாட்டிலேயே இருப்பீர்கள். நீங்களாக எதையேனும் செய்ய வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே அதை நீங்கள் செய்வீர்கள், மற்றபடி யாருமே உங்களை எளிதாக ஏதேனும் ஒரு விஷயத்தை செய்வதற்கு துண்டுதலாகவோ அல்லது கன்வின்ஸ் செய்யவோ முடியாது. சில நேரங்களில் அமைதியை விரும்பி தனியாக இருப்பது உங்களுக்கு பிடிக்கும்
காபுசீனோ:
நீங்கள் விரும்பிக் குடிக்கும் காப்பி காப்புசீனோவாக இருந்தால் நீங்கள் சாகச விரும்பி மற்றும் வெளிப்படையான குணம் கொண்டவர். எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியைக் கடைப்பிடிப்பவர், நேர்மையாக இருப்பவர். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். இவை அனைத்தும் கடந்து, நீங்கள் மிகவும் கிரியேட்டிவ்வான நபராக இருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் எல்லாவற்றையும் கச்சிதமாக செய்ய வேண்டும் என்ற அப்சஸிவவான எண்ணம் கொண்டவர்கள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிளாக் காபி குடிப்பவர்கள் போல அந்த அளவுக்கு ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் கிடையாது. ஆனால் உடல்நலம் பாதிக்காமல் இருப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோஷம் தரும் விஷயங்கள் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரே மாதிரியான வாழ்க்கை மற்றும் திரும்ப திரும்ப ஏற்படக்கூடிய ரூட்டின் ஆன விஷயங்கள் இவர்களுக்கு போர் அடித்துவிடும். வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும் என்பதை பெரிதும் விரும்புவார்கள், அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள்.
எஸ்பிரஸ்ஸோ:
காபி வகை பர்சனாலிட்டி அடிப்படையில் நீங்கள் தனிப்பட்ட மற்றும் மற்றவர்களை விட பொதுவாகவே வித்தியாசமான நபராக இருப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் அல்லது வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை ஆழமாக நம்புகிறீர்கள். நீங்கள் நடைமுறையை சார்ந்து இருப்பவர், நேரத்தை கடைபிடிப்பவர், எல்லாவற்றிலுமே ஒழுக்கமாக இருக்க வேண்டும், எதிலும் நேரம் தவறக்கூடாது ஒழுக்கம் தவறக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் உங்களுக்கு விதித்துக் கொண்டு செயல்பட்டு வருவீர்கள். ஒரு விஷயத்தை முடிக்காமல் மற்றொரு விஷயத்தில் தலையிட மாட்டீர்கள். எஸ்ப்ரெஸ்ஸோ விரும்பவர்கள் இயற்கையாகவே தலைமைப் பண்பை கொண்டிருப்பார்கள். வாழ்க்கையில் குறிக்கோள்கள் இருக்கும், தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும், எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்பட வேண்டுமென்பதால் பெரும்பாலும் தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை பற்றி தெரியாமல் போகும் சாத்தியம் உள்ளது. டைம் டேபிள் போட்டு எப்பொழுதுமே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில நேரம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி எதையும் திட்டமிடாமல் செய்வது உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.
லாட்டே:
உங்களுக்கு லாட்டே பிடிக்கும் என்றால் காஃபி பர்சனாலிட்டி வகையில் நீங்கள் இயல்பாகவே உற்சாகமான நபராகவும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை கொண்டவராகவும் இருப்பீர்கள். ரிஸ்க் எடுக்க விரும்பாத நபர் நீங்கள். எளிதாக இருக்கக்கூடிய வேலைகளை செய்வதற்கு விரும்புவீர்கள். இரு தரப்புக்கு நடுவில் உரையாடல்கள், விவாதங்கள் ஏற்படும் போது நீங்கள் யாருக்கும் சாதகமாகவோ அல்லது ஒரு தரப்பை ஆதரிப்பவராகவோ இருக்க மாட்டீர்கள். நியூட்ரலாக இருக்கவே விரும்புவீர்கள். உங்களுக்கு எந்த விஷயத்தையுமே சிக்கலாக்கிக்கொள்ள பிடிக்காது. எனவே பெரிய பிரச்சனைகளை கூட நீங்கள் எளிதாக அணுகுவதை தான் விரும்புவீர்கள். இதனாலேயே முடிவு எடுப்பது என்பது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் என்ன வந்தாலும், என்ன நடந்தாலும், உங்களிடம் இருந்து எது விலகி போனாலும் நீங்கள் மிக எளிதாக அதை ஏற்றுக்கொண்டு விடுவீர்கள். நீங்கள் தாராள மனம் கொண்டவர், மற்றவர்கள் விரும்புவதை செய்ய ஆசைப்படுவீர்கள், பணிவானவர் மற்றும் சொகுசாக இருப்பதை விரும்புவீர்கள். நீங்கள் வெளிப்படையாக இருந்தாலும் அது மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது என்று நினைப்பீர்கள்.