அந்த புகைப்படத்தை பார்த்தாலே இந்த விசித்திரமான இடம் எங்கு உள்ளது என உடனே கூகுளில் தேட வைக்கும் அளவிற்கு சுவாரஸ்யமானது. அதை பார்க்கும் போதே ஏன் பிராவைத் தொங்கவிடுகிறார்கள் என்று பல கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன. இதைத் தவிர, எங்கிருந்து ஆரம்பித்தது, எங்கிருந்து இவ்வளவு பிராக்கள் வந்தன என பல கேள்விகள் எழும்.
ஏன் இங்கு பிராவை தொங்கவிடுகிறார்கள்..? : பிரா வேலியில் உள்ளாடைகள் ஏன் தொங்கவிடப்படுகின்றன என்பதற்கு வெவ்வேறு காரணங்களும் வெவ்வேறு கதைகளும் உள்ளன. சொல்லப்போனால், ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் இது மாறுகிறது. சில பெண்கள் தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவது போல், பிராவை கழட்டி வேலியில் தொங்கவிடுவதை புகைப்படமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
இந்த வேலி கட்டமைக்கப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளர்களும், மார்பக புற்றுநோய் விழிப்புணர்விற்காக வேலை செய்து வருகிறார்கள். இத்துடன் இங்கு ப்ராவை மாட்டி வைக்கும் பெண்களுக்கு பிடித்தமான வாழ்க்கை துணை கிடைப்பதாகவும் கதைகள் வலம் வருகின்றன. இதனால் பல பெண்கள் தங்களது பிராவை இந்த வேலியில் தொங்கவிட்டுச் செல்கின்றனர்.
எப்போது தொடங்கியது..? : நியூசிலாந்து இணையதளம் ஒன்றில் கிடைத்த தகவலின் படி, 1998 கிறிஸ்துமஸ் மற்றும் 1999 புத்தாண்டுக்கு இடையில் நான்கு ப்ராக்கள் இங்கு தோன்றின. இதற்குப் பிறகு நிறைய விவாதங்கள் நடந்தன, பின்னர் பிப்ரவரியில் இங்கு பிராக்களின் எண்ணிக்கை அதிகரித்து 60 ஆக மாறியது. அதன் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்தது. இன்றைய தின அளவில் கணக்கிட்டால், ஆயிரக்கணக்கான பிராக்கள் அங்கு தொங்குவதை காண முடியும்.