முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » சலூனுக்கு சென்று பெடிக்யூர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கால் விரல் துண்டிக்கப்பட்ட பரிதாபம்..!

சலூனுக்கு சென்று பெடிக்யூர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கால் விரல் துண்டிக்கப்பட்ட பரிதாபம்..!

சலூன்கள், குறிப்பாக நெயில் சலூன்கள், நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் இடமாகும். ஏனெனில் அங்கு சுகாதார நடவடிக்கைகள் சரிவர பின்பற்றப்படாமல் இருக்கலாம்.

  • 16

    சலூனுக்கு சென்று பெடிக்யூர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கால் விரல் துண்டிக்கப்பட்ட பரிதாபம்..!

    பெடிக்யூர், மெனிக்யூர் இரண்டும் விரல் நகங்களையும், கைவிரல்களையும் பாதங்களையும் அழகுப்படுத்துவதற்கு மட்டுமல்ல, சுத்தமாக வைத்திருப்பதால் ஆரோக்கியமும், தசைகளின் இறுக்கமும் தளர்ந்து அந்த இடங்கள் புத்துணர்வு பெறுவதற்குதான். இதை செய்துகொள்ள பியூட்டி பார்லருக்கு தான் செல்ல வேண்டுமென்பதில்லை. வீட்டிலும் செய்துகொள்ளலாம். ஆனால் சலூனுக்கு சென்று பெடிகியூர் செய்த பெண்ணுக்கு நகத்தில் தொற்று ஏற்பட்டு பெண்ணின் கால் விரல் துண்டிக்கப்பட்ட நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    சலூனுக்கு சென்று பெடிக்யூர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கால் விரல் துண்டிக்கப்பட்ட பரிதாபம்..!

    சலூன்கள், குறிப்பாக நெய்ல் சலூன்கள், நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் இடமாகும். ஏனெனில் அங்கு சுகாதார நடவடிக்கைகள் சரிவர பின்பற்றப்படாமல் இருக்கலாம். நகத்தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். நெயில் சலூனில் மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்யும் ஒருவர், பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் அல்லது சீழ் மற்றொருவரின் நகங்களில் படிந்தால், பரவும்.

    MORE
    GALLERIES

  • 36

    சலூனுக்கு சென்று பெடிக்யூர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கால் விரல் துண்டிக்கப்பட்ட பரிதாபம்..!

    சலூன்களில் பயன்படுத்தும் கருவிகளை சுத்தப்படுத்துவது மிகவும் முக்கியம். இந்த நிலையில் கடந்த 2019ல் ஜார்ஜியாவின் ஃப்ளவரி கிளையைச் சேர்ந்த 59 வயதான அனிதா ஹவுஸ், மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பெடிகியூர் செய்ய சலூனுக்கு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அழகு நிலைய ஊழியர்கள் பெடிகியூர் செய்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 46

    சலூனுக்கு சென்று பெடிக்யூர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கால் விரல் துண்டிக்கப்பட்ட பரிதாபம்..!

    சலூன் ஊழியர் ஹவுஸின் வலது பாதத்தின் பெருவிரலில் உள்ள கால் நகத்தை சுத்தப்படுத்தியுள்ளனர். அப்போது ஹவுசின் நகத்தில் லேசாக இரத்தம் கசிந்துள்ளது. அதை பெரிதும் பொருட்படுத்தாத அப்பெண் பெடிகியூர் செய்துவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், அடுத்த சில மாதங்களில், அவரது கால் சிவப்பு நிறத்தில் வீக்கமடைந்துள்ளது. காலில் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவரை அனுகிய போது, சில ஆண்டிபயாடிக் கிரீமை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார். மேலும் சில மருந்து மாத்திரைகளை வழங்கியுள்ளார். ஆனால் ஒரு வாரத்திற்கு மேலாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்ட போதிலும் சிகிச்சை பலன் அளிக்கவில்லை.

    MORE
    GALLERIES

  • 56

    சலூனுக்கு சென்று பெடிக்யூர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கால் விரல் துண்டிக்கப்பட்ட பரிதாபம்..!

    எனவே இரண்டாவது மருத்துவரை சந்திக்க முடிவெடுத்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது அவரது கால் நகத்தை அகற்ற வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளார். நான்கு வாரங்களுக்குப் பிறகும், அவர் எந்த முன்னேற்றமும் காணவில்லை. 2019 ஆம் ஆண்டு அக்டோபரில், ஹவுஸின் வலது கால்  விரல் முழுவதுமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 66

    சலூனுக்கு சென்று பெடிக்யூர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கால் விரல் துண்டிக்கப்பட்ட பரிதாபம்..!

    இந்த நிலையில் தனது சலூன் அனுபவத்தால் கால் விரலை இழந்த ஹவுஸ் அழகு நிலையங்களுக்கு செல்லும் பெண்கள் விழிப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளார். சலூன்களில் சுகாதார நடவடிக்கைகள் சரிவர பின்பற்றப்படாமல் உங்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் இருந்தால், அங்கிருந்து செல்வது நல்லது என்றும் நகங்களை வெட்டுவதற்கு வீட்டிலிருந்தே கருவிகளை எடுத்துச் செல்வது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் நிறைய வாடிக்கையாளர்கள் வருவதால் மிகவும் பிஸியாக இருக்கும் ஊழியர்கள் அவர்கள் பயன்படுத்தும் கருவிகளை சரிவர சுத்தம் செய்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES