ஆரோக்கியத்தின் நிறமாக கருதப்படும் பச்சை ஒருவரின் மன ஆரோக்கியத்திலும் சிறந்த விளைவுகளை கொண்டுள்ளது. உண்மையாக இதுபோன்ற அமைப்புகள் தெருக்களை அமைதியாகவும் மாசுபாடு இல்லாததாகவும் மாற்றுவதற்காகவே அமைக்கப்பட்டது. சந்திப்புகள் மற்றும் வாக்கிங் செய்வதற்கான இடங்களை பைக் செல்வதற்கான பாதைகளாகவும் விளையாட்டு மைதானங்கள் ஆகவும் மாற்றி அமைப்பது இதன் பின்னணியில் உள்ள திட்டம் ஆகும்.
இந்த பகுதியில் வாழும் மக்கள் மிகவும் ரிலாக்ஸாக உணர்வதாகவும், அமைதியான சூழல் காரணமாக பிறருடன் பேச அதிக நேரம் செலவிடுவதாகவும், இதனால் தனிமைப்படுத்தப்பட்ட மனநிலையில் இருந்து விடுபட்டதாகவும், மாசுபாடு மற்றும் கூட்ட நெரிசலில் இருந்து விலகி இருப்பதாகவும் 2021 ஆம் நடத்தப்பட்ட முதல் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
தற்போது பார்சிலோனா இன்ஸ்டிட்யூட் ஃபார் குளோபல் ஹெல்த் நடத்திய ஒரு ஆய்வில், இதுபோன்ற பச்சை நிற பகுதிகள் அமைக்கும் திட்டமானது அங்கு வசிக்கும் மக்களின் மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகிறது. இந்த முயற்சியானது ஒவ்வொரு ஆண்டும் மோசமான மன ஆரோக்கியம் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை 16 சதவீதம் குறைத்ததாகவும், மன அழுத்தம் சம்பந்தமாக மருத்துவரை சந்திப்போரின் எண்ணிக்கை 13 சதவீதமாக குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நகர மாற்றியமைக்கும் திட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்வதன் மூலமாக, பார்சிலோனா அகலமான நடைபாதைகள், புதிய மரங்கள் மற்றும் செடிகளை நடுதல், பிறருடன் பழகுவதற்கும் பொழுது போக்கிற்கான அதிக இடங்கள், சைக்கிள் மற்றும் பொது போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவம் போன்றவற்றை செய்ய திட்டமிட்டுள்ளது. அனைவரின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு நகரத்தை பச்சை நிறமாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற நகராட்சி போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.