முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » இந்தியாவிலேயே 3வது பணக்கார பெண்மணி... யார் இந்த ராதா வேம்பு...? சாதித்தது எப்படி?

இந்தியாவிலேயே 3வது பணக்கார பெண்மணி... யார் இந்த ராதா வேம்பு...? சாதித்தது எப்படி?

படித்துக்கொண்டிருக்கும் போதே, கடந்த 1996 ஆம் ஆண்டு இவரது சகோதரர்கள் ஸ்ரீதர் வேம்பு மற்றும் சேகர் வேம்பு ஆகியோர் மற்றும் சில நபர்களுடன் இணைந்து அட்வென்ட்நெட் என்ற நிறுவனத்தை நிறுவினார்.

 • 17

  இந்தியாவிலேயே 3வது பணக்கார பெண்மணி... யார் இந்த ராதா வேம்பு...? சாதித்தது எப்படி?

  பெண்கள் என்றாலே எதையும் தெளிவோடும், நுணுக்கமாக முடிக்கும் திறன் உள்ளவர்கள் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார பெண்மணி பட்டியலில் இடம் பிடித்துள்ள தமிழகத்துப் பெண் ராதா வேம்பு.. பணியாளராக மட்டுமில்லாது, பலருக்கு வேலைவாய்பை வழங்கும் அளவிற்கு உயர்ந்தது எப்படி? என்ன சாதித்துள்ளார்? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 27

  இந்தியாவிலேயே 3வது பணக்கார பெண்மணி... யார் இந்த ராதா வேம்பு...? சாதித்தது எப்படி?

  யார் இந்த ராதா வேம்பு? : தமிழகத்தைச் சேர்ந்த ராதா வேம்பு கடந்த 1972 ல் பிறந்தவர். இவரது தந்தை சாம்பமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராஃபராகப் பணிபுரிந்தவர். ராதா வேம்புவிற்கு நான்கு சகோதாரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். சென்னை ஐஐடி நிறுவனத்தில் தொழிற்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்ற ராதா, கடந்த 1988 ஆம் ஆண்டு ராஜேந்திரன் தண்டபாணி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆதித்யா ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 37

  இந்தியாவிலேயே 3வது பணக்கார பெண்மணி... யார் இந்த ராதா வேம்பு...? சாதித்தது எப்படி?

  இவர் படித்துக்கொண்டிருக்கும் போதே, கடந்த 1996 ஆம் ஆண்டு தனது சகோதரர்கள்  ஸ்ரீதர் வேம்பு மற்றும் சேகர் வேம்பு ஆகியோர் மற்றும் சில நபர்களுடன் இணைந்து அட்வென்ட்நெட் என்ற நிறுவனத்தை நிறுவினார்.

  MORE
  GALLERIES

 • 47

  இந்தியாவிலேயே 3வது பணக்கார பெண்மணி... யார் இந்த ராதா வேம்பு...? சாதித்தது எப்படி?

  ஜோஹோ நிறுவனத்தின் திட்ட மேலாளராக : சென்னையை தலைமையிடமாக கொண்ட ஜோஹோ (Zoho) நிறுவனம், ஸ்ரீதர் வேம்புவால் தொடங்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகம் முழுவதும் ஒன்பது நாடுகளில் கிட்டத்தட்ட 12 அலுவலகங்களைக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜோஹோ மெயிலின் திட்ட மேலாளராக ராதா வேம்பு பதவியேற்றார். இந்த நிறுவனத்தில் இவருக்கென்று பெரும்பான்மையாக பங்குகள் உள்ளன. ஜோஹோ மெயில் திட்ட மேலாளராக பதவி வகித்த பின்னர் 250 குழுவிற்குத் தலைமைத் தாங்குகிறார் ராதா வேம்பு.

  MORE
  GALLERIES

 • 57

  இந்தியாவிலேயே 3வது பணக்கார பெண்மணி... யார் இந்த ராதா வேம்பு...? சாதித்தது எப்படி?

  இந்நிலையில் தான் சமீபத்தில், வெளியான பணக்கார பட்டியலின் படி, சுயமாக சம்பாதித்து சாதித்தவர்கள் மற்றும் இந்தியாவில் 3 வது மிகப்பெரிய பணக்கார பெண்மணி என்ற அந்தஸ்தைப் பெற்றார் ராதா வேம்பு. இவரது நிகர சொத்து மதிப்பு, 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது சுமார் ரூபாய் 32, 800 கோடியாகும்.

  MORE
  GALLERIES

 • 67

  இந்தியாவிலேயே 3வது பணக்கார பெண்மணி... யார் இந்த ராதா வேம்பு...? சாதித்தது எப்படி?

  தற்போது வரை ஜோஹோ நிறுவனம் உலகம் முழுவதும் 9 நாடுகளில் இயங்குகிறது. இதுவரை 6 கோடிக்கும் மேற்பட்டவர் ஜோஹோவின் மென்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். தற்போது கிளவுட் அடிப்படையிலான வணிக மென்பொருளுக்குப் பெயர் பெற்ற ஜோஹோ, வாட்ஸ் அப் போன்ற அரட்டை என்ற மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 77

  இந்தியாவிலேயே 3வது பணக்கார பெண்மணி... யார் இந்த ராதா வேம்பு...? சாதித்தது எப்படி?

  சாதாரண குடும்பத்தில் பிறந்து பல குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, பல பெண்களுக்கு சிறந்த உதாரணமாக வலம் வருகிறார் ராதா வேம்பு என்று சொன்னால் அது மிகையாகாது.

  MORE
  GALLERIES