இயற்கையின் படைப்பில் பெரும்பான்மை மக்கள் இயல்பான தோற்றம் உடையவர்களாகவும், ஒருசில மக்கள் நல்ல வசீகரமான தோற்றம் உடையவராகவும் இருக்கின்றனர். வெகுசிலரின் தோற்றம் கொஞ்சம் வித்தியாசத்துடன் காணப்படும்.இருப்பினும், தங்களுடைய தோற்றமும் வசீகரமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. அதனால் தான் சந்தையில் எண்ணற்ற அழகுசாதன பொருட்களின் விற்பனை படு ஜோராக நடக்கிறது. அதையும் தாண்டி சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சையின் மூலமாக தங்கள் தோற்றத்தை அழகானதாக மாற்றிக் கொள்கின்றனர்.
பிளாக் ஏலியன் : அந்தோணி லோஃப்ரெடோ என்பவர் தன்னை கருப்பு ஏலியன் போல மாற்றிக் கொள்ள விரும்பினார். அவர் எப்படி இதைச் செய்தார், தற்போதைய சூழல் என்ன என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் விவரிக்கப்பட்டுள்ளது. அந்தோணியின் உடலில் எண்ணற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் ஏலியன் போல காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக காதுகளையும், மூக்கு துவாரப் பகுதிகளையும், மேல் உதட்டையும் அறுவை சிகிச்சை மூலமாக அவர் நீக்கியுள்ளார்.
புறக்கணிப்பு : அந்தோணியின் வித்தியாசமான முயற்சிக்கு அவரது தாயார் முழு ஆதரவு கொடுத்து வருகிறார். இருப்பினும் சக மனிதர்கள் அந்தோணியை பார்த்து அச்சம் அடைகின்றனர் அல்லது குழப்பம் அடைகின்றனர். இதுகுறித்து அந்தோணி கூறுகையில், “நான் ரெஸ்டாரண்டிற்கு சாப்பிட செல்லும் சமயங்களில் எதிர்ப்புகளை சந்திக்கிறேன். சில சமயம், நான் எல்லோரும் அமர்ந்து சாப்பிடக் கூடிய மாடிப் பகுதியில் அமர்ந்து சாப்பிடுவதற்கு சர்வர்கள் அனுமதிக்க மாட்டார்கள்’’ என்றார்.