டைம் மெஷின் தயாரிப்பில் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் தன்னை ஏமாற்றியதாகவும் அவர் வீடியோவில் கூறியுள்ளார். அபெக்ஸ் டிவி என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் இன்னும் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், எதிர்காலத்தில் இருந்து வந்த அவரும், தற்போது உள்ள இளமைப் பருவமும் ஒன்றாய் இணைந்து பேசியுள்ளனர்.
மேலும், தான் 2042 இல் புரட்சிகரமான சாதனையாக டைம் மெஷினை கண்டுப்பிடித்தாகவும், அதற்கு டைம் AWIX 200 என்று பெயரிட்டதாகக் கூறியுள்ளார். 2045 இல் முழுமையான தயார் நிலையில் இருந்ததாகவும், அதன் மூலம் கடந்த காலத்திற்குச் செல்லலாம் என்றும் கூறினார். அதன் நேரப் பயணத்திற்காக, முதலில் இறைச்சித் துண்டுகளிலும், பின்னர் எலிகளிலும் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதாகக் கூறினார்.
நிறுவனத்துடன் ஏற்பட்ட தகராறினால், டிசம்பர் 28, 2046 வருடத்தில் இருந்து 2023 ஆம் வருடத்திற்கு வந்துவிட்டதாகக் கூறியுள்ளார். டைம் மெஷின் தயாரிக்கத் தேவையானத் தகவல்கள் தன்னிடம் உள்ளதாகவும், தான் சொல்வதை நிருப்பிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும் அந்த மர்ம நபர் வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.