முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » இப்படி ஒரு அதிசயமா? பாறையில் முளைக்கும் குட்டி பாறைகள்.. விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய விளக்கம்!

இப்படி ஒரு அதிசயமா? பாறையில் முளைக்கும் குட்டி பாறைகள்.. விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய விளக்கம்!

வாழும் கற்கள் என அழைக்கப்படும் அறிய வகை ட்ரோவாண்டஸ் கற்களை பற்றி அறிந்து கொள்வோம்.

  • 16

    இப்படி ஒரு அதிசயமா? பாறையில் முளைக்கும் குட்டி பாறைகள்.. விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய விளக்கம்!

    தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் உள்ள சிறிய நகரமான கோஸ்டெஸ்டி. இங்கு தான் உலகின் அறியவகை கல் பாறைகள் உள்ளன. இதை  Trovant stones ட்ரோவாண்டஸ் கற்கள் எனக் கூறுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 26

    இப்படி ஒரு அதிசயமா? பாறையில் முளைக்கும் குட்டி பாறைகள்.. விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய விளக்கம்!

    பொதுவாக கற்கள் என்றால் உயிரற்ற பொருள்கள் தானே. ஆனால் இவையோ வாழும் கற்கள் என அழைக்கப்படுகின்றன. காரணம் இந்த கற்கள் தாங்களாகவே புதிய கற்களை உருவாக்கி குழந்தைகள் போல பெற்றெடுக்கின்றன. மேலும், ஒரு இடத்தை விட்டு மற்ற இடத்திற்கு இடம் பெயர்கின்றன. இந்த ஆச்சரிய உண்மையை விஞ்ஞானிகளே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 36

    இப்படி ஒரு அதிசயமா? பாறையில் முளைக்கும் குட்டி பாறைகள்.. விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய விளக்கம்!

    இந்த கற்களை டைனோசர் முட்டைகள் எனவும், புதைபடிவங்கள் எனவும் அல்லது ஒருவித அதிசய கல் என்றும் பலர் நம்புகிறார்கள். இருப்பினும், ட்ரோவாண்டஸ் என்பது சுண்ணாம்பு, மணற்கல் மற்றும் பிற கனிமங்களைக் கொண்ட ஒரு வகை பாறை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ட்ரோவண்டுகள் பொதுவாக கூழாங்கற்கள், இலைகள், எலும்புகள் அல்லது புதைபடிவங்களைச் சுற்றி சேகரிக்கப்பட்ட ஈரமான தாதுக்களிலிருந்து உருவாகின்றன.

    MORE
    GALLERIES

  • 46

    இப்படி ஒரு அதிசயமா? பாறையில் முளைக்கும் குட்டி பாறைகள்.. விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய விளக்கம்!

    இந்த விசித்திரமான கற்கள் மனித குல தோற்றத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே உருவானவை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சுமார் 53 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ட்ரோவன்ட்ஸ் உருவானது. நிலநடுக்கங்களால் இந்தப் பாறைகள் இடம் பெயர்ந்துள்ளன. உண்மையில் இந்தப் பகுதி பழங்காலத்தில் கடலாக இருந்ததாக அறியப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    இப்படி ஒரு அதிசயமா? பாறையில் முளைக்கும் குட்டி பாறைகள்.. விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய விளக்கம்!

    இதில் கனிமங்கள் உள்ளன. இந்த கனிம கற்கள் கற்களின் அளவை அதிகரிக்க வினைபுரியும் இரசாயன கூறுகளைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கல்லில் இருந்து சிமெண்ட் போன்ற ஒரு பொருள் வெளிவருகிறது. மழை பெய்யும் போது, ​​இந்த பொருள் வெளியிடப்படுகிறது. இந்த விரிவாக்கப்பட்ட பகுதி பின்னர் பிரிக்கப்பட்டு இரண்டாவது ட்ரோவென்ட்ஸ் ஆகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    இப்படி ஒரு அதிசயமா? பாறையில் முளைக்கும் குட்டி பாறைகள்.. விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய விளக்கம்!

    ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு  1,000 வருடங்களுக்கும் 1.5 முதல் 2 அங்குலங்கள் வரை ட்ரோவன்ட்ஸ் வளரும். இந்த கற்களின் அளவு அதிகரித்து வருவதால், அவை குழந்தைகளை பெற்றெடுக்கும் என்று கூறப்படுகிறது. இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

    MORE
    GALLERIES