முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » ஆண்குறி திருவிழா.. ஜப்பான் மக்கள் கொண்டாடும் விநோத பண்டிகை.. வரலாறு இதுதான்!

ஆண்குறி திருவிழா.. ஜப்பான் மக்கள் கொண்டாடும் விநோத பண்டிகை.. வரலாறு இதுதான்!

1969ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் ஜப்பானியர்கள் ஆண்குறி திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

  • 16

    ஆண்குறி திருவிழா.. ஜப்பான் மக்கள் கொண்டாடும் விநோத பண்டிகை.. வரலாறு இதுதான்!

    உலகில் பல்வேறு தரப்பு மக்கள் பல்வேறு விதமான பண்டிகை விழாக்களை கொண்டாடி வருகின்றனர். அதில் சில பண்டிகைகள் வினோதமானதாக இருப்பதை நாம் கேள்விப்படிருப்போம். அப்படி ஒரு பண்டிகை தான் ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாத முதல் வார ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    ஆண்குறி திருவிழா.. ஜப்பான் மக்கள் கொண்டாடும் விநோத பண்டிகை.. வரலாறு இதுதான்!

    ஜப்பானில் உள்ள கவாசகி பகுதியில் மக்கள் ஒன்று திரண்டு Kanamara Matsuri எனப்படும் ஆண்குறி பண்டிகை திருவிழாவை கொண்டாடுகின்றனர். விழாவில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஆண்குறி பொம்மைகளை தூக்கி சுமந்து உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். இந்த திருவிழாவில் பெண்கள் திரளான முறையில் பங்கேற்று கொண்டுகின்றனர். இந்த வினோத திருவிழாவை காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 36

    ஆண்குறி திருவிழா.. ஜப்பான் மக்கள் கொண்டாடும் விநோத பண்டிகை.. வரலாறு இதுதான்!

    1969ஆம் ஆண்டில் இருந்து இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த காலகட்டத்தில் அப்பகுதியில் பாலியல் ரீதியான நோய்கள் பரவிய நிலையில்,பாலியல் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் அங்குள்ள கணாயாமா(Kanayama) என்ற கோவிலில் தஞ்சம் புகுந்தனர்.

    MORE
    GALLERIES

  • 46

    ஆண்குறி திருவிழா.. ஜப்பான் மக்கள் கொண்டாடும் விநோத பண்டிகை.. வரலாறு இதுதான்!

    இந்த கோயில் கிபி 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு வழிபாடு செய்தப் பின்னர் நிலைமை சீரானதாகக் கூறப்படுகிறது. அப்போது தொடங்கி ஆண்டு தோறும் இந்த ஆண்குறி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கவாசகி பகுதியில் கொண்டாப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    ஆண்குறி திருவிழா.. ஜப்பான் மக்கள் கொண்டாடும் விநோத பண்டிகை.. வரலாறு இதுதான்!

    கோவிட் காலத்தில் இந்த திருவிழாவில் சுணக்கமான நிலையில், இந்தாண்டு பண்டிகை வழக்கம் போல களைக்கட்டியுள்ளது. ஆண்குறி பொம்மைகள் மற்றும் வேடமணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதில் மூன்றாம் பாலினத்தவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 66

    ஆண்குறி திருவிழா.. ஜப்பான் மக்கள் கொண்டாடும் விநோத பண்டிகை.. வரலாறு இதுதான்!

    நவீன காலத்திற்கு ஏற்ப பாலியல் நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வு என்பது இந்த விழாவில் முக்கிய இடம் பிடித்தன. பழங்கால தொன்மம் மற்றும் நவீன காலத பாலியல் சுகாதாரம் கருத்துக்கள் ஆகியவற்றை இணைத்து ஜப்பான் மக்கள் இந்த வினோத பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

    MORE
    GALLERIES