நித்யானாந்தா : சர்ச்சைகளுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சாமில்லாதவர் நித்யானாந்தா. பாலியல் வழக்கு, குஜராத் ஆசிரமத்தில் சிறுமிகள் கடத்தல் உள்ளிட்ட புகார்களில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதிலிருந்து தப்பிக்க போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிலிருந்து தப்பி சென்றிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஈக்குவாடாரில் ஒரு தீவை விலைக்கு வாங்கி 'கைலாசா' என்ற புதிய நாட்டை நித்யானாந்தா உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்கி பகவான் : கல்கி பகவான்.. அம்மா பகவான்..ஸ்ரீ பகவான்.. என்றெல்லாம் அழைக்கப்படும் இவரின் உண்மை பெயர் விஜயகுமார். கல்கி சாமியார் மற்றும் அவரது மகன் தொடர்புடைய நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் கோடி கணக்கான பணம் மற்றும் வெளிநாட்டு பணங்கள் சிக்கியது. ரியல் எஸ்டேட் துறையில் இவரது அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பயன்படுத்தப்பட்டதாக புகார் உள்ளன.
சுவாமி சதாச்சாரி சாய் பாபா ஓம்ஜி : இவர் மீது டெல்லி காவல்துறையினர் ஆயுத சட்டம் மற்றும் தடா பிரிவுகளின் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு பெண்ணை அடித்த சர்ச்சையும் இவர் மீது உள்ளது.